ஈரானின் குர்திஸ்தான் பகுதியில் நேற்றிரவு 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஈரான் மற்றும் ஈராக் இடையேயான எல்லைப்பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து மேற்கு திசையில் சுமார் 320 கி.மி. தொலைவில் குர்திஸ்தான் பகுதியில் அமைந்துள்ள சர்போல்-இ சஹாப் நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தினால் சுமார் 8 பேர் காயமடைந்துள்ளதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.
கடந்த நவம்பர் 12-ம் தேதி இதே பகுதியில் ஏற்பட்ட 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.