ஹக்கீம் கூறுவது போன்று எந்தவிதமான சாணக்கியமும் இல்லை : சீ.யோகேஸ்வரன் MP

 இரா.சம்பந்தனின் விட்டுக் கொடுப்புதான் கிழக்கு மாகாண முதலமைசர் பதவி என்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் கூறுவது போன்று எந்தவிதமான சாணக்கியமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவரது அலுவலகத்தில் இன்றைய தினம்(25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், உண்மையாகவே கிழக்கு மாகாணத்தில் 11 ஆசனங்களை வைத்திருந்தும் முதலமைச்சர் பதவியை பெறாமல் சென்றமை ஒரு துரதிஸ்ட வசம் என்றுதான் சொல்ல வேண்டும்.

எமது தலைவர் சம்பந்தன் ஐயாவை பொருத்தவரையில், நாங்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற கருத்தையே முன்வைப்பவர். வடக்கு கிழக்கு பகுதி தமிழ் பேசும் மக்கள் இருக்கும் பகுதியாகவே இருக்க வேண்டும் என்பதில் விருப்புடையவர்.

கிழக்கு மாகாணத்திலே 11 ஆசனத்தோடு எங்களது பிரதிநிதிகள் முதலமைச்சர் தமிழில் ஒருவர் கொண்டுவரவேண்டும் என்று முயற்சித்த போது, தமிழ் பேசும் ஒருவர்தான் முதலைமைச்சரக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்.தற்போது முஸ்லிம் காங்கிரஸில் இருந்த பிரதிநிதிகள் எங்களோடு இணைய விரும்பியுள்ளனர். இவ்வாறு அவர்கள் இணையும் போது நாங்கள் ஆட்சி அமைப்பதற்கு இலகுவாக இருக்கும்.

தமிழ் பேசும் மக்களுக்காகவே அனைத்து நடவடிக்கையும் தந்தை செல்வா காலம் முதல் மேற்கொண்டு வருகின்றோம். ஆகையால் அவர்கள் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் முதலமைச்சராக வருவது பிரச்சினை இல்லை என இரா.சம்பந்தன் கூறியிருந்தார்” என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.