அட்டாளைச்சேனை எஸ்.எல்.மன்சூரின் கல்வியின் நோக்கும் போக்கும் நூல் வெளியீடு

பி.எம்.எம்.ஏ.காதர்

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.எல். மன்சூர் எழுதிய ‘கல்வியின் நோக்கும் போக்கும்’கல்விசார்ந்த நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை(23.09.2017)காலை 9.00மணிக்கு அட்டாளைச்சேனை சந்தைச் சதுக்கத்தில் அமைந்துள்ள மசூர் சின்னலெப்பை அரங்கில் நடைபெறவிருக்கின்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிஸாம் கலந்து கொள்கின்றார்.அறிஞர் சித்திலெப்பை ஆய்வு நிலையத்தின் தலைவர் மர்சும் மௌலானா, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் சட்டத்;தரணி எம்.ஏ.சி.எம். உவைஸ் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கின்றனர்.
இந்நிகழ்வில் கல்விமான்கள், அறிஞர்கள், இலக்கியவாதிகள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.அட்டாளைச்சேனை அபிவிருத்தி அமைப்பினரின்(யுனுளு)கல்விப் பிரிவினால் இந்த நூல் வெளியீடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.