• Home »
  • Slider »
  • நயவஞ்சக தனமான தலைமையின் குரலாக இருக்கும் தவம்

நயவஞ்சக தனமான தலைமையின் குரலாக இருக்கும் தவம்

நாம் தனிக்க விடப்பட்ட போதுதான் எம் தனித்துவ இயக்கமான முஸ்லீம்காங்கிரஸ் உருவானது,

இதை கூட தவம் அறியவில்லை என்பது மன வேதனை.

நண்பர் தவம் அறிய,

வடக்கு கிழக்கு முஸ்லீம் சமுகம் தமிழ் தேசிய வாதிகளால் வடக்கிலிருந்து கிழக்கின் கரையோரமாக வஞ்சிக்கப்பட்ட போதும்,

சிங்கள பேரினவாதிகளாலும் அம்பாரையின் எல்லைப்புறமிருந்து திருகோணமலையின் பெரு நிலப்பரப்பு வரை அபகரித்து நாம் தனித்து விடப்பட்ட போதும் மறைந்த தலைவர் அஷ்ரபால் முஸ்லீம் காங்கிரஸ் எனும் தனித்துவ அரசியல் இயக்கம் உருவானது. அந்த தனித்துவத்தை காக்கவே முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை நம்பி முஸ்லீம்கள் வாக்களித்தனர்.

நாம் வஞ்சிக்கப்பட்ட போது எமக்கான தனித்துவ அரசியலை முன்னெடுக்க முடியாது போன அரசியல் தலைவர்களை மக்கள் தூக்கி எறிந்தது போல கண்டியில் ஐ.தே.க. வாக்குகளை நம்பி நாடகமாடும் ஹக்கீமையும் அவருக்கு பைத் சொல்லும் உங்களைப் போன்றவர்களையும் மக்கள் உணராமல் போவார்களா?

எம் தனித்துவத்தை 2002 ம் ஆண்டு நோர்வே ஒப்பந்தத்தில் சிதறடித்து எம்மை அரச தரப்பில் அங்கமாக எம்மை குழுவாக  பணத்துக்காக அமரச் செய்த  நயவஞ்சக தனமான தலைமையின் குரலாக இருக்கும் நீங்கள் வேறெதும் தனித்துவத்தை பற்றி பேச முடியுமா?

மகிந்த ராஜபக்ச எனும் பெயர்  இன்று உங்களை போன்ற இயலாமை அரசியல் விற்பன்னர்களின் வீரம் பேசுகின்ற வாய்ச் சொல் ஆக மாறி இருக்கிறது.

மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதி தலைமையிலான பிரதமர் ரணிலினுடைய அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் அதிகாரம் பொருந்திய உங்களுடைய தலைமைகளும் பிரதிநிதிகளும் உள்ளடங்களான முஸ்லீம் மக்கள் உருவாக்கிய ஆட்சியே நல்லாட்சி இதில் மகிந்தவினுடைய புதல்வர்களை அவரது சகோதரர்களை அவருக்கு சார்பானவர்களை சிறைக்கு அனுப்பிய பெரும் சாதனை நிகழ்த்திய கூட்டாட்சி
பெளத்த இனவாதம் மகிந்தவால் நடை பெறுகிறது என்கிறீர்கள். அதை நடைமுறைப்படுத்துகின்ற ஞானசார தேரரை ஏன் இந்த அரசால் கைது செய்ய முடியவில்லை?
மகிந்தவின் மகனை கைது செய்தவர்களால் ஞானசாரவை ஏன் கைது செய்ய முடியவில்லை?

நண்பரே!!
நீதி துறைக்கு சவாலான நீதிமன்ற அறிக்கையை கிழித்த ஞானசாரருக்கு நீதி அமைச்சருடன் பேச்சு மேடை வழங்கினீர்கள்.

அரச அதிபருக்கு கட்டளையிட அம்பாரையில் அனுமதி வழங்கினீர்கள்.

பொலிஸ் அதிகாரத்தை விட பெரிய அதிகாரத்தை முஸ்லீம குடிசைகளை இல்லாதொழிக்கும் பெரிய பொருப்பை பொலநறுவையில் வழங்கினீர்கள்.

 சக வாழ்வு அமைச்சர் மனோ கணேசனை மிரட்டும் அங்கீகாரத்தையும் நல்கினீர்கள்.

படைத்த ரப்பில் ஆலமீனை இகழ்வதையும் பார்த்துக் கொண்டு இருந்தீர்கள்.

பள்ளிகள் உடைப்பதை வாய் பொத்தி நின்றீர்கள்.

ஆனால் அன்றிலிருந்து இன்று வரை முஸ்லீம்கள் மீதான நெருக்குவாரங்களின் போது உண்மையையும் சத்தியத்தையும் பேசும் இன்று மக்களால் புரிந்து கொள்ளப்பபடுகின்ற சர்வதேசத்தின் நாசகார வேலைகளை  அதாஉல்லாஹ் பேசிய போது ஜப்பானில் இருந்து அவருக்கெதிராக உங்களை பேச வைத்தது
அடுத்த மாகாண சபை தேர்தலில் அதாஉல்லாஹ் எதிர்பாளர்களின் வாக்குகளை தன் பக்கம் சாய்த்து கொள்ள போடுகின்ற மாசல வித்தை என்பதை இங்கு யாரும் உணர வில்லை என நினைக்கிறீரா?

முஸ்லீம் காங்கிரஸ் கட்சி தலைவர் வாய் மூடி இருக்க பிரதிஅமைச்சர்கள்பாராளுமன்ற உருப்பினர்கள் முதலமைச்சர் மாகாண அமைச்சர்கள் சிரேஷ்டமானவர்கள் மெளனம் காக்கும் போது நீங்கள் துள்ளி குதிப்பதிலிருந்து  சமுகத்தின் முதுகில் ஏறி சுய நல அரசியல் செய்யும் உங்களின் அற்பத் தனத்தை மக்கள் உணர்ந்து கொள்ளாமல விடுவார்களா?

குட்டை குழம்பியதை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் வடக்கு கிழக்கு வெளியே சிங்கள முஸ்லீம்  குழப்பத்தை உருவாக்கி உள்ளிருந்த சம்பிக போன்றோரை விலைக்கு வாங்கி ஆட்சி மாற்ற சர்வதேசம் நிகழ்த்துவதை அதாஉல்லாஹ் அறிவு பூர்வமாக கூறியதை மக்கள் நிராகரித்து உணர்வு களுக்கு இடமளித்து சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் வீழ்ந்தனர்.

இன்று கிழக்கிலே அவ்வாறான நிலை உருவாக்கப்பட்டு கிழக்கு முஸ்லீம்களையும் சிங்களவர்களையும் பிளவு படுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் சர்வதேச நிகழ்ச்சி நிரலை துணிந்து நின்று பேசுகின்ற அதாஉல்லாவின் துணிவை சத்தியத்தை அதன் உண்மை தண்மை அனைவரும் உணர்ந்து கொண்ட நிலையில் உங்களின் கருத்து மக்களால் ஒரு போதும் ஏற்க முடியாமல் போகும்.

முக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.
-நிருவாகம்-