நிவாரணமாக வழங்கப்படவுள்ள 2500 ரூபாவை இ.தொ.கா. வரவேற்கின்றது: ஆறுமுகன் தொண்டமான்

க.கிஷாந்தன்

தோட்ட தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக 2500 ரூபாவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றார். 2 மாதத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட இந்த நிவாரண தொகையை கூட்டு ஒப்பந்த அடிப்படையில் சம்பள பிரச்சினை தீர்க்கும் வரை இந்த நிவாரண தொகையை தொடர்ந்தும் வழங்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

 IMG_8122_Fotor

அக்கரப்பத்தனை கிளாஸ்கோ னெதர்ஸ்டன், டயகம வெஸ்ட் முதலாம் பிரிவு ஆகிய பகுதிகளில் ஆகிய பிரதேசங்ககளில் 27.07.2016 அன்று பாதை திறப்பு விழாக்களில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், மத்திய மாகாண சபை உறுப்பினர் எம். சக்திவேல், முன்னால் அம்பகமுவ பிரதேச சபை தலைவர் வெள்ளையன் தினேஷ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாத் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

IMG_8199_Fotor

 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

 

நிவாரணமாக வழங்கப்படவுள்ள 2500 ரூபாவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வரவேற்கின்றது.

 

இருந்தும் கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு நிர்ணய சம்பள உயர்வை பெற்றுக்கொள்வதில் சற்று தாமத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளும் பொழுது சிலரால் குழப்பியடிக்கப்பட்டமையே இதற்கு முக்கிய காரணமாகும்.

 

எவ்வாறாக இருந்தாலும் தொழிலாளர்களுடைய சம்பள பிரச்சினையை தீர்ப்பது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. தொழிலாளர்களாகிய உங்களுக்கு தெரியும் காங்கிரஸ் எவ்வாறாக சம்பள பிரச்சினைகளை தீர்த்துள்ளது என்று.

 

ஆனால் இம்முறை தேயிலை விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளமையால் நாம் முன்வைத்த சம்பள தொகையை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுகின்றது. ஆனால் நாம் நிர்ணயத்த சம்பளத்தை அடைந்தே தீர்வோம்.

 

இதற்காக பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டு வந்திருந்தாலும் கூட அடுத்த மாதம் முதல் வார அளவில் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை நடாத்தப்படவிருகின்றது.

 

அந்த பேச்சுவார்த்தையில் ஒரு இணக்கப்பாடு காணப்படும் என்பதை எதிர்பார்க்கின்றோம். இருந்தும் தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் சம்பளத்தை நாம் பெற்றே தீர்வோம் என்பதில் ஐயம் இல்லை.

 

சிலர் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் உரிமைகளில் தலையிட்டு தங்களை வளர்த்து கொள்வதற்காக மக்களை திசை திருப்பி வருகின்றனர். ஆனால் காங்கிரஸின் சேவை தொடர்பில் இவர்களுககு நன்கு தெரியும் எந்த நேரத்தில் எதை பெறுவார்கள் தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுக்க எவ்வாறான சந்தர்ப்பத்தில் எவ்வாறு செயல்படுவார்கள் என்பதை அறிந்தவர்கள் தான் இன்று மக்கள் மத்தியில் அவர்களை திசை திருப்புவதற்காக கிளம்பி வந்துள்ளார்கள்.

 

இன்று தோட்ட நிர்வாகங்கள் தோட்ட காணிகளை காடுகளாகி விட்டு தொழிலாளர்களின் குறைப்பையும் நிகழ்த்தி விட்டு தொழிலுக்கு வராவிட்டால் தேயிலை காணிகளை மூடுவதாக அறிவிக்கின்றனர்.

 

அவ்வாறு நடந்தால் கவலைப்பட தேவையில்லை. மூடும் தேயிலை காணிகளை அந்தந்த தோட்டத்தில் வாழ்கின்ற தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுத்து விட்டு அவர்கள் செல்லலாம். காரணம் இந்த தேயிலை காணிகளை உருவாக்கியவர்கள் தொழிலாளர்களே தான். தன் உழைப்பின் சக்தியை முழுமையாக தேயிலை காணிக்கே செலவழித்து விட்டு யாரோ சொன்னார்கள் என்பதற்காக பூர்விகத்தை இழக்க எமது மக்கள் முட்டாள் அல்ல என்றார்.