ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழு பணிகளை ஆரம்பித்துள்ளது !

 

image
பொதுத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழு ஆரம்பித்துள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் விடுத்த அழைப்பிற்கு அமைய இந்த கண்காணிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழு இன்று (21) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரோமானியாவின் பாராளுமன்ற உறுப்பினரான கிறிஸ்டியன் பிரிடா இந்த குழுவிற்கு தலைமை தாங்குவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஐவரிகோஸ்ட் மற்றும் கென்யா போன்ற நாடுகளில் நடைபெற்ற தேர்தல்களை கண்காணித்த குழுக்களுக்கும் இவர் தலைமைதாங்கியிருந்தாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது.

இலங்கையில் பொதுத் தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள குழுவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த 70 உறுப்பினர்களும் நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் அடங்குகின்றனர்.

இதேவேளை, இலங்கையின் தேர்தல் பணிகளை கண்காணிக்கும் ஐரோப்பிய ஒன்றியக் குழுவிற்கு தலைமை வகிப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக கிறிஸ்டினா பிரிடா தெரிவித்துள்ளார்.

தமது குழுவின் செயற்பாடு இலங்கையின் ஜனநாயக நடைமுறைகளையும் அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகங்களையும் பலப்படுத்துவதற்கு பங்களிப்பு செய்யும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.