இனவாத கருத்துக்களை இலங்கை மக்கள் ஏற்றுக்கொண்டதில்லை , அதற்கு கடந்த தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளார்கள் !

 

image

 நீண்ட நாட்களாக தடைப்பற்றிருந்த ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி ரணில் விக்கிரமசிங்க பிரதமாராக பதவியேற்ற பின்னரே படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதென இராஜங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 ‘இது எமது பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் ஒரு செயற்பாடாகும். எனவே, இவ்வாறான செயற்பாடுகள் தொடர வேண்டுமானால் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக வேண்டும்’ எனவும் அவர் கூறினார்.

 இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழமையான தனது இனவாத முகத்தை காட்ட தொடங்கிவிட்டார். அநுராதப்புரத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தில், இனவாதத்தை கையில் எடுத்துக்கொண்டும் பிரபாகரன் பற்றிபேசுவதும் மட்டுமே அவருடைய கருத்தாக இருந்தது.

 

 இதன்மூலம் அவர்களது தோல்வி ஊர்ஜிதமானது என்பது தெளிவாகின்றது’ என்று கூறினார். ‘கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்தவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது அவருடைய இனவாத பேச்சும் இனவாத செயற்பாடுமே ஆகும். அதனையே மீண்டும் கையிலெடுத்து, தமது தோல்விக்கு மீண்டும் குழி தோண்டிவிட்டார். மஹிந்த ஒரு செல்லாக்காசு என்பதை மக்கள் இன்று தீர்மானித்து விட்டார்கள். கடந்த தேர்தலை போலமீண்டுexம் பஸ்ஸில்; மக்களை ஏற்றிக்கொண்டு சென்று கூட்டம் நடத்தும் நாடகம் அநுராதப்புரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது’ என்றும் அவர் கூறினார்.

 ‘இனவாத கருத்துக்களை இலங்கை மக்கள் ஏற்றுக்கொண்டதில்லை. அதற்கு கடந்த தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளார்கள். வெளிநாடுகளுடன் தனக்கு தொடர்பு இல்லை என்று கூறும் மஹிந்த வெளிநாடுகளின் உதவி இன்றி எமது நாட்டை அபிவிருத்தி செய்யமுடியாது என்பதை மறந்துவிட்டார். ஆனால், அந்த அதித திறமையும் புத்தி கூர்மையும் நிறைந்த ஒருவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. அவரால் மட்டுமே இந்த நாட்டை நல்வழிப்படுத்தி அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்லமுடியும்’ என்று கூறினார்.