அம்பாறையில் ஆசனம் உறுதி என்கிறார் அன்வர் எம் முஸ்தபா !

10553551_10152265828542297_4203046108561303787_n

 சம்மாந்துறையை சேர்ந்த எழுத்தாளர் ஒருவரின் சம்மாந்துறை கள நிலவரம் எனும் தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தசெய்தி ஒன்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்கட்சியின் சர்வதேச விடயங்களுக்காண பணிப்பாளரும் அந்த கட்சியின் அதியுயர் பீட உறுப்பினருமான பொறியலாளர் அன்வர் எம் முஸ்தபா அவர்களை சம்பந்தபடுத்தி எழுதியிருந்த கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்து தனது முக நூல் பக்கமான (anver m musthapha) இல் பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்தார் 

“இந்த செய்தி ஒரு ஆதாரம் இல்லாத வெறும் கற்பனையான செய்தி. எங்களது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமைத்துவம் என்னிடம் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் தனிப்பட்ட முறையில் கூறிய வாக்குறுதிகளில் ஒன்றான (அன்வர் முஸ்தபா) எனக்கும் தேர்தலில் போட்டியிட ஆசனம் வழங்கப்படும் என்ற உறுதிமொழியை இன்று அவரது அமைச்சிலுருந்த பலரின் முன்னிலையில் பகிரங்க படுத்தியதோடு எனக்கு ஆசனம் வழங்க தீர்மானம் எடுக்கபட்டுள்ளது. எங்களது கட்சியின் தேசிய தலைமைத்துவம் ஒரு போதும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறுவதில்லை. தயவு செய்து பிழையான செய்திகளை போட வேண்டாம். ஊடக தர்மத்தை பாதுகாருங்கள்”

இதன் மூலம் அவர் எதிர்வரும் பொது தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் களமிறக்க பட உள்ளார் என்பதும் தெளிவாகிறது.அண்மையில் இவரை தமது கட்சியில் களமிறக்க ஒரு பெரும்பான்மை கட்சி அழைத்திருந்தபோதும் அதனை நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிட தக்க ஒன்றாகும்.

கடந்த சில மாதங்களாக கட்சியினது விஸ்தரிப்பு பணிகளில் அதி கூடிய பங்களிப்பை அம்பாறையில் செய்திருந்த இவர் தமது மற்றும் கட்சியினது செல்வாக்கை அம்பாறையில் கூட்டியுள்ளது உண்மையே. தனியார் பலகலைகழகம் ஒன்றின் உரிமையாளரான இவர் தமது தனியார் பலகலைகழகம் மூலம் 3000 க்கும்  மேற்பட்ட மாணவர்களுக்கு புலமைப்பரிசில் மூலம் கல்விகற்க உதவியதுடன் ஷம்ஸ் லங்கா பவுண்டசனின் தவிசாளராக இருந்து பல சேவைகளை மறைமுகமாக செய்து வருகிறார். அதனையும் தாண்டி இவரது பால்ய நண்பர்கள் சிலரும் ஏனையகட்சிகளில் இருந்து பிரிந்து வந்து  இவருடன் இணைந்து இந்த தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் போட்டியிட உள்ளதும் இவருக்கு ஒரு பலமாக உள்ளது.இவர் இந்த தேர்தலில் வெற்றிபெறுவாரா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்……

ற.மாதவி