2015 ஆம் ஆண்டு வரை மஹிந்த ராஜபக்க்ஷ நாட்டை வைத்து உழைத்தார், யுத்தத்திலும் உழைத்தார் : பிரதமர் !

ஆகஸ்ட் 17ற்குப் பின்னர் உருவாரும் புதிய அரசாங்கத்தினூடாக புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வு ஏற்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

319094-ranil-wickremesinghe-afp

தமிழர், சிங்களவர் என பிரிந்து ஒருவரையொருவர் பழிவாங்கிய யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என குறிப்பிட்ட பிரதமர், பொருளாதார வலயங்கள் ஏற்படுத்தப்பட்டு வடக்கு, கிழக்கு உட்பட அனைத்துப் பிரதேசங்களும் பொருளாதாரத்தில் கட்டியெழுப்பப்படும் என்றும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் மக்களது காணிகள் மீள அவர்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்படுவதோடு நாட்டில் காணி உரிமையில்லாத அனைவருக்கும் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

2015 ஆம் ஆண்டு வரை மஹிந்த ராஜபக்ஷ நாட்டை வைத்து உழைத்தார். யுத்தத்திலும் உழைத்தார். வீழ்ச்சியுற்ற நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் இணைந்து ஆகஸ்ட் 17ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை உருவாக்க அழைப்பு விடுப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு நேற்று கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் நாடளாவிய ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைவோம். அதற்கான செயற்திட்டத்தை ஏற்றுக்கொண்டு அனைவரும் செயற்படுவோம்.

நாம் எமது மாநாட்டிலும் அதனை யோசனையாக முன்வைத்துள்ளோம். அதற்கிணங்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியொன்றை நாம் உருவாக்குவோம். அனைத்துக் கட்சிகளுக்கும் நான் அதற்கான அழைப்பினை விடுக்கின்றேன். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அதனை நாம் அரசியல் கட்சியாக மாற்றவுள்ளோம்.

இப்போதுள்ள பெரும் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியே. 

ஐக்கிய தேசியக் கட்சியில் எம்மோடுள்ள அனைத்துக் கட்சிகளும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். அதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.