உயர்நீதிமன்றம் செல்கிறார்கள்!

z_p15-Education (1)799818358smtbz_p01-Over_0salinda_dissanayake

 

 

 

 

 

 

 

 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உள்ளிட்ட எஸ்.எம். சந்திரசேன, டி.பீ. ஏக்கநாயக்க, ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் சாலிந்த திஸாநாயக்க ஆகிய ஐவருமே கடந்த சனிக்கிழமை நீக்கப்பட்டிருந்தமை அறிந்ததே. அவர்கள் அனைவரும்  மத்தியகுழுவின் தீர்மானத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது. மத்தியகுழுவிலிருந்து சட்டவிரோதமான முறையிலேயே தாங்கள் ஐவரும் நீக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

 ஆகையால் மத்தியகுழுவின் தீர்மானத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கையொப்பமிடப்பட்ட கடிதங்கள், மத்தியகுழுவிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்தியகுழுவின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டமையினாலேயே உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.