1,700 மைல்கள் பறக்கும் ‘பிளாக் வார்ப்லர்’

 

baww-rrbo

 பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறக்கும் என்பது தெரிந்ததுதான். பெரிய கொக்குகள், நாரைகள், கழுகுகள் போன்ற பறவைகள் அத்தனை தூரம் பறக்கும் என்று நாம் நினைத்திருப்போம். சமீபத்தில், வெறும் 15 கிராம் எடையே உள்ள, ‘பிளாக் வார்ப்லர்’ என்று அழைக்கப்படும் பாடும் சின்னஞ்சிறு பறவை, 1,700 மைல்கள் பறக்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  அதுவும் இரை தேடவோ, ஓய்வெடுக்கவோகூட எங்கும் நிற்காமல் பறக்கக்கூடிய சக்தி, இந்த பறவைக்கு இருக்கிறது. சிட்டு குருவி போல இருக்கும், 40 பிளாக்போல் வார்ப்லர்களின் கால்களில் சிறிய மின்னணு சாதனத்தை இணைத்து விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.  

 தென் அமெரிக்கா, வட அமெரிக்கா என்று கண்டம் விட்டு கண்டம் பறக்கும் இந்த பறவைகள், கடல் மீது பறந்தாலும், நதி மீது பறந்தாலும் துளிகூட தண்ணீரும் குடிப்பதில்லை என்பதுதான் ஆச்சரியம்.