நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்றால் 19 க்கு ஆதரவு வழங்கியே ஆகவேண்டும் !!

TH11-SRI_LANKA-DEF_2239491f

19வது அரசியல்  திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில்  நிறைவேற்றுவதற்கு ஆதரவாக  வாக்களிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர்  தீர்மானித்துள்ளனர்.

 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியாக வேண்டும் என்று ஜனாதிபதியும் , பிரதமரும் தங்களுக்கிடையில் பொது இணக்கத்திற்கு வந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், 19வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது குறித்து சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து தெரியவந்துள்ளதை அடுத்தே ஜனாதிபதியும், பிரதமரும் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளனர்.