கொழும்பில் நூறு வீதம் டெல்டா பரவல்-இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர்

நாட்டில் தொடர்ச்சியாக முடக்க நிலையை அமுல்படுத்துவதை தடுக்க முடியாது என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பில் டெல்டா வைரஸ்தான் நூற்றுக்கு நூறு வீதம் உள்ளது. டெல்டா வைரஸ் பிறழ்வடைந்து மேலும் ஒரு திரிபு தற்போது கொழும்பில் பரவிக் கொண்டிருக்கின்றது.

இந்தத் திரிபு ஏனைய மாகாணங்களுக்கும் பரவிக் கொண்டிருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை. உலக சுகாதார ஸ்தாபனத்தின் எதிர்வு கூறலின் படி, எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிவரை நாட்டில் முடக்கநிலையை அமுலாக்கினால், மேலும் 7,500 உயிர்களைப் பாதுகாக்க முடியும்.

அத்துடன், அக்டோபர் 3ஆம் திகதிவரை முடக்கநிலையை அமுலாக்கினால், மேலும் 10ஆயிரம் உயிர்களைப் பாதுகாக்க முடியும் என அந்த அறிக்கையின் மூலம் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.