Antigen-Rapid Diagnostic Test (Ag-RDT) செய்யப்பட வேண்டியவர்கள் யார்…?

{"uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"]}

Antigen-Rapid Diagnostic Test (Ag-RDT) செய்யப்பட வேண்டியவர்கள் யார்…?

1) COVID-19 சந்தேகத்திற்குரிய நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள்.

இவ்வாறானவர்களுக்கு Antigen Testற்குரிய Sample டன் PCR Test ற்குரிய Sample ம் சேர்த்து ஒரே தடவையில் எடுக்கப்படும்;

Antigen Test,
• Positive ஆகுமிடத்து PCRற்குரிய Sample முறையாக அகற்றப்படும். (Discard)

• Negative ஆகுமிடத்து PCRற்குரிய Sample மூலம் PCR செய்யப்பட்டு COVID-19 இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

2) COVID-19 அறிகுறிகளற்ற, ஆனால் COVID-19 நோயாளிகளுடன் நெருக்கமானவர்கள் அல்லது ஏதோ ஒரு வகையில் தொடர்பு பட்டவர்கள்.

3) COVID-19 அறிகுறிகளற்ற, ஆனால் COVID-19 பரவுகை அவதானிக்கப்படுகின்ற பிரதேசமொன்றில் இருந்து ஏதாவதொரு சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள்.

4) COVID-19 நோயாளிகளுடன் தொடர்பு பட்டதாக (Exposure) சந்தேகிக்கப்படும் சுகாதாரத் துறை ஊழியர்கள்.

5) COVID-19 சந்தேகத்திற்கிடமான மரணங்கள்.

இச்சந்தர்ப்பத்திலும் செய்யப்படும் Antigen Test, Negative ஆகுமிடத்து; PCR செய்யப்பட்டு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

6) இன்புளுவென்சா போன்ற நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலை OPDக்கு வரும் நோயாளிகள்.

முக்கிய குறிப்புகள் சில…

# பரிசோதனைகளுக்கான Sampleகள் எடுக்கப்படும் உடற்பகுதி.

• Antigen Test – ஒரு பக்க மூக்குத்துவாரத்தினூடாக மூக்குத் தொண்டைப் பகுதி (Nasopharynx)

• PCR – மறு பக்க மூக்குத்துவாரத்தினூடாக மூக்குத் தொண்டைப் பகுதியும் அத்துடன் வாயினூடாக தொண்டைப் பகுதியும் (Throat) என இணைந்த (Combined) இரண்டு Sampleகள்.

# Antigen Test பெறுபேறுகள் விரைவாகப் பெறப்படும் (15-30 நமிடங்கள்) ஆனால் PCR பெறுபேறுகள் தாமதமாகும் (12-24 மணித்தியாலங்கள் அல்லது அதற்கும் மேல்)

# Antigen Test, Positive ஆகுமிடத்து PCRம் Positive ஆகவே இருக்கும் ஆனால்,

Antigen Test, Negative ஆகுமிடத்து PCR பெரும்பாலும் Negative ஆகவே இருக்குமே தவிர; Positive ஆவதற்குரிய சாத்தியமும் குறிப்பிட்டதொரு சதவீதத்தில் உள்ளது.

(Guidelines, Ministry of Health)

– Dr. தமீம் முஸ்தபா –