அக்கரைப்பற்று மக்களுக்கு மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் வேண்டுகோள்

மாநகர மக்களுக்கு !!

அக்கரைப்பற்று மாநகர மக்களுக்கான வினயமான வேண்டுகோள் .!!

எமது பிரதேசத்தில் கடந்த சில தினங்களில் கண்டறியப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையானது ,
எம் எல்லோரையும் ஒரு கணம் ஆட்டம் காண வைத்துள்ளது .

 

அத்துடன் ,
அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளும் கவலை தருபவையாக இருந்தது .
மேலும் ,
இன்னும் முடிவுகள் எதிர்வரும் நாட்களில் கிடைக்க இருக்கின்றது .

இந்த நிலையில் நாம் எல்லோரும் தூர நோக்கோடும் , சாதூர்யமாகவும் , அர்பணிப்புடனும் நடந்து கொள்வதனால் மாத்திரமே இந்த சூழ்நிலையை வெற்றி கொள்ளலாம் என்ற அடிப்படையில் ,

இன்று , சனிக்கிழமை 28/11/2020 ல் நடைபெற்ற பொறுப்பு வாய்ந்த துறைசார் உத்தியோகத்தர்களுடனான கூட்டத்தில்
“தனிமைப்படுத்தல் சட்டத்தை”
எமது பிரதேசத்தில் இன்னும் சில தினங்களுக்கு இறுக்கமாக கடைப்பிடிக்க தீர்மானித்துள்ளோம் !

இத் தீர்மானமானது எமது மக்களின் நன்மையை கருத்தில் கொண்டே எடுக்கப்பட்டது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் .
ஆகையால் ,
இந்த ஆபத்தான நிலைமையின் அளவை எங்களால் அறிந்து கொள்ள ஒரு அவகாசமாக குறுகிய சில நாட்களின் தேவை இருப்பதால் பொறுமையுடனும் , அர்பணிப்புடனும் நாம் எல்லோரும் அதனை ஏற்று நடந்து கொள்ள கேட்கின்றேன் !!

அதனால் ,
முடியுமானவரை எல்லோரும் வீட்டிலேயே தங்கி இருக்க கேட்கப்படுகின்றீர்கள் .
முக்கியமாக ,
வியாபார நிலையங்கள் , விவசாய நிலங்களுக்கு செல்லுதல் , வீதிகளில் நடமாடுதல் என்பவற்றை முற்றிலுமாக எமது மக்களின் நலனுக்காக சில தினங்கள் தவிர்ந்து இருங்கள் என்று வினயமாக கேட்கின்றேன் !
தனிமைப்படுத்தல் சட்டம் கடுமையாக நடைமுறை படுத்தபட இருப்பதால் வீணான அசெளகரீகத்தை தவிருங்கள் .

இன்ஷா அல்லாஹ் விரைவில் உங்களின் அன்றாட தேவைகளை கடந்த காலத்தைப்போல் உங்களின் காலடியில் கொண்டுவர ஏற்பாடுகள் நடைபெறுகின்றது .
ஆதலால் பொறுமையுடன் காத்திருங்கள் .

மேலும் ,
மாநகர எல்லைக்குள் திண்மக்கழிவு அகற்றும் நடவடிக்கைகள் கிரமமாக தொடரும் .
ஆனால் உங்களின் வீட்டு கழிவுகளை முறையாக பொதி செய்து ,
வரும் வாகனத்தில் கொண்டு போய் கொட்டும் பொறுப்பை சிரமம் பாராது ஏற்றுக்கொள்ள கேட்கின்றேன் !!

எனவே –
இந்த அசாதாரண சூழ்நிலையை உங்களின் ஒத்துளைப்புடன் வெற்றி கொள்ள எல்லோரும் கருமமாற்ற முன்வர வேண்டும் எனக் கேட்டு ,
உங்கள் எல்லோருக்குக்காகவும் பிரார்த்திக்கின்றேன் !!

அதாஉல்லா அகமட் ஸகி
முதல்வர்
மாநகர சபை
அக்கரைப்பற்று .