20ஆவது திருத்தம்- இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தொடர்பான ஷரத்தை நீக்க ஜனாதிபதி மறுப்பு..

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1603179725073"}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தொடர்பான ஷரத்தை நீக்க மறுத்துள்ளார் என தெரியவருகிறது.

20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள இரட்டை குடியுரிமை சம்பந்தமான ஷரத்தை தவிர, அவசர சட்டமூலங்களை நிறைவேற்றுவது, கணக்காய்வு சட்டமூலம் மற்றும் அமைச்சரவையின் எண்ணிக்கையை வரையறுக்கும் ஷரத்துக்களை திருத்த அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அப்போது கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, தானும் ஒரு காலத்தில் இரட்டை குடியுரிமை பெற்றிருந்தவர் என்பதால், 20ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள அந்த ஷரத்தை நீக்குவதற்கு இணங்க முடியாது எனக் கூறியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு மற்றும் அவசர இடர் நிலைமைகளில் மாத்திரம் அவசர சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என்ற வகையில் திருத்தம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது