அரசியலமைப்பிற்கான 20வது திருத்தம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் வெளியாகியுள்ளது

அரசியலமைப்பிற்கான 20வது திருத்தம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் வெளியாகியுள்ளது.
இதன்படி

1. ஜனாதிபதியின் கடமைகள் தொடர்பில் விசேடமாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் நடாத்தப்படுவதற்கு உகந்த நிலையை தேர்தல் ஆணைக்குழுவின் வேண்டுதலின்படி ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்ற ஜனாதிபதிக்கான கடப்பாட்டை இல்லாதொழிப்பதாயின் அதற்கு மக்கள் ஆணை பெறப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

எனினும் பாராளுமன்ற குழுநிலையில் மேற்கொள்ளப்படவிருப்பதாக சட்டமா அதிபர் முன்வைத்த விடயஙகளின்படி தேர்தல் நடாத்தப்படுவதற்கு உகந்த நிலையை தேர்தல் ஆணைக்குழுவின் வேண்டுதலின்படி ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்ற ஜனாதிபதிக்கான கடப்பாடு மீண்டும் உள்வாங்கப்படும் என்றால் குறித்த பகுதி 2ஃ3 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படமுடியும்; என தெரிவிக்கப்பட்டுள்ளது

2. ஜனாதிபதியின் விடுபாட்டுரிமை தொடர்பில் விசேடமாக அடிப்படைஉரிமை மீறல் தொடர்பில் ஜனாதிபதிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கிட முடியும் என்ற ஏற்பாட்டை இல்லாதொழிப்பதாயின் அதற்கு மக்கள் ஆணை பெறப்படவேண்டும் என தெரிவிகக்கப்பட்டுள்ளது

3. பாராளுமன்றத்தை ஜனாபதி 4 ½ வருடங்களுக்கு கலைக்க முடியாது; என்ற ஏற்பாட்டை இல்லாதொழிப்பதாயின் அதற்கு மக்கள் ஆணை பெறப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

எனினும் பாராளுமன்ற குழுநிலையில் மேற்கொள்ளப்படவிருப்பதாக சட்டமா அதிபர் முன்வைத்த விடயஙகளின்படி தேர்தல் நடாத்தப்படுவதற்கு பாராளுமன்றத்தை 2 ½ வருடங்களுக்கு கலைக்கமுடியாது என ஏற்பாடு செய்யப்படும் என்றால் குறித்த பகுதி 2ஃ3 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படமுடியும்; என தெரிவிக்கப்பட்டுள்ளது

4. தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களை பகிரங்க அலுவலர் போன்றோர் பின்பற்றாமல் விடுவது குறறம்; என்ற ஏற்பாட்டை இல்லாதொழிப்பதாயின் அதற்கு மக்கள் ஆணை பெறப்படவேண்டும் என தெரிவிகக்கப்பட்டுள்ளது

5. இவை தவிர ஏனைய விடயங்கள் 2ஃ3 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படமுடியும்; என தெரிவிக்கப்பட்டுள்ளது

சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ்
2020-10-10