பதில் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணரின் விசேட அறிக்கை

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1602330413826"}


வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினர்களை பார்வையிடுவதை முடிந்தளவு தவிர்க்குமாறு பதில் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் எஸ்.ஶ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினர்கள் பொருட்களை வழங்கும் சந்தர்ப்பத்தில், அவர்களை நேரடியாக விடுதிகளில் சந்திக்காது, வேறு வழிகளில் அவற்றை வழங்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், வைத்தியசாலைகளுக்கு செல்லும் போது, முகக் கவசங்களை அணிதல், ஒரு மீட்டர் சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் மற்றும் கை கழுவுதல் போன்ற சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது அவசியமாகும்.

அத்தியவசிய வைத்திய தேவைகளுக்கு, அருகிலுள்ள வைத்தியசாலைகளை நாடுமாறும் பதில் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் எஸ்.ஶ்ரீதரன் இன்று விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.