சாணக்கியன் MP யின் சாணக்கியத்தால் பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நேர்முகப்பரீட்சை

நியமனம் கிடைக்காத பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதம் பெற்றுக்கொடுப்பு.

“பல வருடங்களாக பல்வேறுபட்ட கஷ்டங்களின் மத்தியில் கல்வி கற்று தொழில் இல்லாமல் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கல் மாறி வந்த அரசாங்கங்களினால் பட்டதாரி பயிலுனர்களாகவே நியமனம் வழங்கப்பட்டது. அந்த வகையில் 2018ல் வழங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனங்கள் நாடளாவிய ரீதியில் நிரந்தர நியமனமாக மாற்றி கொடுக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பில் பல பட்டதாரிகளுக்கு அந்த நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் கவனிப்பாரற்று இருந்துள்ளனர்.

அவ்வகையான 29பட்டதாரி பயிலுனர்கள் கிழக்கு மாகாணத்தின் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சையிலும் உள்வாங்கப்படாமலும் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர்.

அதுவும் இவர்களுடன் பட்டதாரி பயிலுனர் நியமனம் கிடைத்தவர்களுக்கு நிரந்தர நியமனம் கிடைத்துள்ள போது இவர்களுக்கு கிடைக்காமை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. நானும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கனகசபையுடன் இணைந்து பொதுநிர்வாக அமைச்சின் இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் தொடர்பு கொண்டு இவர்களுக்கான நியமனம் பெறுவதற்கான நேர்முகப்பரீட்சைக்கான அழைப்பு கடிதத்தை பெற்றுக்கொடுத்துள்ளோம். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இவர்களுக்கான நேர்முகப்பரீட்சை பொதுநிர்வாக அமைச்சில் நடைபெற உள்ளது.