எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஐவரை ஆளும் கட்சியில் இணைக்கும் நடவடிக்கையில் பசில் ராஜபக்ஷ

20ஆம் அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு பெற்றுக் கொள்வதற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த 5 பேரின் ஆதரவு பெற்றுக் கொள்ளும் பொறுப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு இணையவுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கும் எதிரணியில் சிலர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஹிந்த யாப்பா அபேவர்த்தன சபாநாயகர் பதவிக்கு நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து ஆளும் கட்சியில் தற்போதைய ஆசனங்களின் எண்ணிக்கை 149 ஆக குறைந்துள்ளது.

20ஆம் அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்வதற்கு 150 பேரின் ஆதரவு அவசியமாகியுள்ளது. எனவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஐவரை ஆளும் கட்சியில் இணைக்கும் நடவடிக்கை பசில் ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் பஸில் ராஜபக்ஷ செயற்பாடுகள் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.