களனி கங்கையுடன் சுமார் 10ஆயிரம் வீடுகளின் கழிப்பறை கழிவுகள் சேர்கின்றன !

கொழும்பு மாவட்டத்தில் களனி கங்கைக்கு இரண்டு பக்கங்களில் உள்ள 10ஆயிரம் வீடுகளுக்கும் அதிகமான வீடுகளின் கழிப்பறை கழிவுகள் களனி கங்கைக்கு செல்வதாக மத்திய சுற்று சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக களனி கங்கை தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

கித்துகலவில் இருந்து களனி கங்கை கடலுக்கு விழும் இடம் வரையில் தெரிவு செய்யப்பட்ட 17 இடங்களின் நீர் மாதிரிகள் பெற்றுக் கொண்டு தொடர்ந்து பரிசோதிப்பதாக மத்திய சுற்று சூழல் அதிகார சபை குறிப்பிட்டுள்ளார்.

சில தொழிற்சாலைகள் இரகசியமான முறையில் கழிப்பறை கழிவுகளை களனி கங்கையில் அனுப்புவதாகவும் இது தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.