தடுமாறும் CSK…தொடர் தோல்வியின் பின்னணி என்ன? இளம் வீரர்கள் இன்மையா? அல்லது சிறந்த ஆரம்ப துடுப்பாட்டமின்மையா?

ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் திரில் வெற்றி பெற்றது.


சென்னை சூப்பர்கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் இடையிலான ஐபிஎல் தொடரின் 14-வது ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார்.அதன்படி டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கனர். 3 பந்துகளை மட்டுமே சந்தித்த பேர்ஸ்டோவ் ரன் எதுவும் எடுக்காமல் சாஹர் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.

அடுத்துவந்த மணிஷ் பாண்டே, வார்னருடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மணிஷ் பாண்டே 29 ரன்னிலும், வார்னர் 28 ரன்னிலு அடுத்தடுத்து வெளியேறினர்.அடுத்துவந்த வில்லியம்சன் 9 ரன்னில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய இளம் வீரர்களான அபிஷேக் சர்மா – பிரியம் கார்க் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
24 பந்துகளை சந்தித்த அபிஷேக் சர்மா 4 பவுண்டரிகள் 1 சிக்சர் உள்பட 31 ரன்கள் குவித்தார். அதேபோல் மற்றொரு வீரரான பிரியம் கார்க் 26 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சர் உள்பட 51 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார்.இதனால், 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் தீபக் சாஹர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
இதையடுத்து, 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வாட்சன் மற்றும் டூ பிளசிஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பத்திலேயே தடுமாறிய வாட்சன் 6 பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். அடுத்துவந்த அம்பதி ராயுடுவும் 8 ரன்னில் வெளியேறினார். தொடக்க வீரரான டூ பிளசிஸ் 19 பந்தில் 22 ரன் எடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஜாதவ் 3 ரன்னில் அவுட் ஆனார். 

அடுத்து களமிறங்கிய கேப்டன் டோனி மற்றும் ஜடேஜா ஜோடி சென்னை அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஜடேஜா 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உள்பட 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 
ஆனாலும், வெற்றி பெற 8 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்ற கடினமான இலக்குடன் கேப்டன் டோனி (30 பந்துகளில் 32 ரன்கள்) களத்தில் இருந்தார். பின்னர் கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்டது.ஆனால், சென்னை அணியால் கடைசி ஓவரில் 20 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் கேப்டன் டோனி 47 ரன்களுடனும், சாம் கரன் 15 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.ஐதராபாத் அணியின் நடராஜன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.