வரலாற்றை மாற்றியமைக்க இருக்கும் இஸ்ரேல் – லெபனான் பேச்சுவார்த்தை

இஸ்ரேல் – லெபனானுக்கிடையில் நீண்டகாலமாக தொடரும் கடல் எல்லைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளன.

இரு நாடுகளையும் பேச்சுவார்த்தைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை வொஷிங்கடன் முன்னெடுத்து வருகிறது.
இந் நிலையில் இந்த பேச்சுவார்த்தையானது ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
ஒக்டோபர் நடுப் பகுதியில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று இஸ்ரேலின் எரிசக்தி அமைச்சர் கூறியுள்ளார். அதேபோன்று லெபனான் பாராளுமன்ற சபாநாயகர் நபி பெர்ரி இன்றைய தினம் பேச்சுவார்த்தைக்கான கட்டமைப்பை ஒப்புக் கொண்டதாகக் கூறினார்.

இந் நிலையில் இப் பேச்சுவார்த்தையை வரவேற்ப்பதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் போம்பியோ, இது இரு நாடுகளிலும் உள்ள குடிமக்களின் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கான சாத்தியங்களை இது வழங்குவதாகவும் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.