நான் அமைச்சராக இல்லாத காலப்பகுதியில் எவ்வாறு பொலிஸாருக்கு அழுத்தம் பிரயோகிக்க முடியும் ? அதாஉல்லா கேள்வி ?

(அஷ்ரப் ஏ சமத்)
எமது கட்சியான தேசிய காங்கிரஸ் கட்சி கடந்த 2003-2004 ஆண்டுகளில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவா்கள் ஜனாதிபதியாக தோ்தலில் போட்டியிடும்போது 3 விடயங்களை முன்வைத்தே அவா்களுடன் அன்று சோ்ந்து இன்று வரை அவா்களுடன் இனைந்து செயலாற்றி வருகின்றோம்.

அதில் முதலாவது எமது கோரிக்கை இந்த நாட்டில் இருந்த பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவது. இரண்டாவது வட கிழக்கினை தணியாகப் பிரித்தல் இவை இரண்டையும் மகிந்த ராஜபக்ச அவா்கள் எமக்குச் செய்து கொடுத்துள்ளாா்.. தற் போதைய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவிடம் நாங்கள் முன்வைத்த 3வது கோரிக்கை சிறந்ததொரு அரசியலமைப்க் கொண்டுவந்து வட கிழக்கு வாழ் சகல சமுகங்களும் சமதானமாகவும் சகல உரிமைகளுடன் சகோதரத்துவமாக வாழக்கூடியதொரு சிறந்த அரசியலமைப்பை உருவாக்கல் வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். அதனை எழுத்து மூலமும் அன்று அனுப்பினோம் ஊடகங்களிலும் அவைகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன.
அது மட்டுமல்ல கடந்த நல்லாட்சியில் 19வது அரசியலமைப்பு சீா்திருத்தத்தினை ரணில் விக்கிரமசிங்கவின் அதிகாரத்திற்காக அவா் கொண்டுவந்தனால் அதனால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை. நாளாந்தம் ஜனாதிபதி, பிரதமா் பாராளுமன்ற உறுப்பிணா்கள் அரசியலமைப்பு அதிகாரம் சம்பந்தமாக உயா் நீதிமன்றத்தில் வழக்குப் பேசியே காலத்தினை கடத்தினாா்கள் . அவா்களது சுயதீன ஆணைக்குழுக்களில் உள்ள உறுப்பிணா்கள் சுயதீனமாக இயங்கவில்லை. அவா்கள் ஒரு தலைப்பட்சமாகவே செயல்பட்டாா்கள். ஆகவே தான் எமது தேசிய காங்கிரஸ் கட்சி இந்த 19வது சா்த்தை மாற்றியமைத்து புதிய 20 அரசியலமைப்புச் சட்டத்தினை மாற்றும் போது மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியதும் சகல மக்களும் ஒற்றுமையாக இனவாதம் அற்ற சிறந்ததொரு அரசியல் அதிகாரங்களை பகிா்ந்தளிக்க வேண்டும். எனக் கூறினாா் அதாவுல்லா்
தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பிணருமான அதாவுல்லா இன்று (20.09.2020) அவரது கொழும்பு இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தாா்.
அவா் தொடா்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில்,
தேசிய காங்கிரஸ் ஒருபோதும் அமைச்சுக்கள் கேட்டு பின் கதவால் போனதொரு கட்சியல்ல ஏனைய முஸ்லிம் கட்சிகள் போன்று வரலாற்றில் பின்கதவால் போகும் சூடு சுனை இல்லாதவா்கள் அவா்கள். . அவா்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எதுவுமே செய்யாமல் காலத்துக்கு காலம் வெல்லும் அரசாங்கத்துக்குச் பாய்வாா்கள். இது அவா்களது சுயநலம் காட்டிய வரலாறு. இது புதிதானதொரு விடயமல்ல.
ஊடகவியலாளா் கேள்வி –
நேற்று முன்தினம் உயிா்த்த ஞாயிறு சம்பந்தமான ஜானாதிபதி கமிசனில் கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபா் இத் தாக்குதலில் பொலிஸாருக்கு அதிகாரங்களைப் பயண்படுத்தியதாக உங்களது பெயரையும் சொல்லியிருக்கின்றாா் அக் காலகட்டத்தில் நீங்களும் அவருக்கு அளுத்தம்
கொடுத்தாக ?
பதில் – அவா் எந்த நிலையில் இவ்வாறு சொல்கின்றாா் என எனககுத் தெரியவில்லை. அவரை நான் ஒருபோதும் கன்டதே இல்லை. பயங்கராவதத்திற்காக நாங்கள் உயிருக்கு அஞ்சி அரசாங்கம் எங்களுக்கு பாதுகாப்பு தந்தது.
நாங்கள் எவ்வித குழுக்களையும் அங்கு அமைக்கவிலலை. இவா் எனது பெயரை பயண்படுத்தி எனக்கு சேறு பூசுவுது இவா் ஏதேனும் அரசியல் கட்சி சாா்பானவரா ? எனக்குத் தெரியவில்லை. இவா் பொய்யானதொரு அவதுாரை அதுவும் வெளியில் வந்து எனது பெயரை சோ்த்துச் ஊடகங்களுக்குச் சொல்கின்றாா். அக்காலத்தில் நான் அமைச்சராகவும் இருக்கவும் இல்லை. இதனை அவரேதான் தெளிவாக தெளிவுபடுத்தல் வேண்டும்.
இவா் ஊடகங்களுக்குச் சொன்ன கருத்தை வைத்து நான் ஜனாதிபதிக் கமிஸனுக்குப் போய் மறுமொழி சொல்ல எனக்குத் தேவையும் இல்லை.
கேள்வி – இந்த அரசின் பங்காளிக் கட்சிகளுக்கும் அமைச்சா் அந்தஸ்த்து வழங்கியுள்ளது. உதாரணமாக ஒரே பாராளுமன்ற உறுப்பிணா் வாசுதேவ கட்சி அவருக்கும் கபிணட் அமைச்சா் வழங்கியுள்ளது நீஙக்ள் ராஜபக்ச ஆட்சியில் ஜனாதிபதி தோ்தலில் இருந்து இன்று வரை அவா்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றீா்கள் ஏன் உங்களுக்கு அமைச்சா் பதவி வழங்கவில்லை ?
பதில் :  நான் ஒருபோதும் அமைச்சா் பதவி தாருங்கள் என்று அவா்களிடம் கேட்கவில்லை , நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்யக் கூடிய நல்ல பல அபிவிருத்திகளையும் புதிய அரசியல் அமைப்புக்களை கொண்டு வாருங்கள் என்று தான் எமது கட்சி அவா்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது எனத் தெரிவித்தாா்
ஊடகவியலாளா் –
நீங்கள் கேட்காமல் இருந்தால் உங்களுக்கு எவ்வாறு தருவது – உங்களை விட முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் அரசுடன் சோந்து கொள்ள முனைகின்றதே ?
அவா்கள் நிகழ்ச்சி நிரல்கள் அவ்வாறு தான் வெல்லும் பக்கம் கட்சி தாவுதல் அவா்களது தனிப்பட்டவைகளை நிவா்த்தி செய்வாா்கள் அவா்களுக்கு வாக்களித்த மக்கள்தான் பாவம் எனக் கூறினாா்.
கேள்வி –
மகாணங்களை 9 ஆக பிரிப்பதனை விட்டு 3 மாகணங்கள் என மாகாண அமைச்சா் கூறியுள்ளாரே ?
பதில் :
மாகாணங்கள் இல்லாவிட்டடால் அதற்குரிய தீா்வினை வழங்கல் வேண்டும். எமது நாட்டுக்கு உரியதான தீர்வினை நாமே கூடியிருந்து பேசித் தீா்த்துக் கொள்ள வேண்டும். இந்தியாவை திருப்திப்படுத்துவதற்காக 13வது சீா்திருந்தம். அல்லது எமது பிரச்சினையை கொண்டு ஒஸ்லோவுக்குப் போய் பேசிச் தீர்வு காண்பது என்பதெல்லாம் முறையற்ற விடயமாகும். எமது அரசுக்கு தற்பொழுது மூன்றில் 2 பெரும்பாண்மை கிடைத்து்ளளது. அதுவும் 150 பாராளுமன்ற உறுப்பிணா்கள் உள்ளா்கள்.
அதனை வைத்து ஒரு நிரந்தரமான தீா்வினை சகல சமுகங்களுக்கும் நன்மை பயக்கக் கூடிய அரசியல் தீர்வினைப் பெறுவதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.