மலேசியா நாட்டின் சட்டத்தில் புதிய மாற்றங்கள்

20792197
பிரதமர் நஜிப் ரசாக்

மலேசியாவின் தேசத்துரோக குற்றச் சட்டத்தில் புதிய மாற்றங்களாக சில கடுமையான தண்டனைகளை அந்நாட்டு நாடாளுமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது.

காலனித்துவ காலத்தில் அறிமுகப்படுத்த இந்தச் சட்டம், அரசியல் ரீதியான மாற்றுக்கருத்தாளர்களை அடக்க, பயன்படுத்தப்படுவதாக எதிர்கட்சி கூறுகிறது.

ஆனால், ஒரு ஸ்திரமான நல்லிணக்கமுடைய நாட்டை பராமரிக்க இந்தச் சட்டம் அவசியம் என்று கூறுகிறார் பிரதமர் நஜிப் ரசாக்.

புதிய மாற்றங்களின்படி கட்டாயச் சிறைத் தண்டனை இருபது ஆண்டுகள் வரை வழங்கப்படலாம். ஒரு மோசமான சட்டத்தை, இந்த மாற்றங்கள் மேலும் கடுமையாகியுள்ளதாக மனித உரிமைக்கான ஐநாவின் உயர் ஆணையர் சயித் ராத் அல் ஹுசெய்ன் தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணையின்றி காலவரையின்றி ஒருவரை சிறையில் வைக்கும் வகையில், பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு சட்டத்தை மலேசிய நாடாளுமன்றம் நிறைவேற்றிய சில தினங்களில் இந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.