மங்கள சமரவீர பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ள கடிதம்

மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் உயர் மட்ட அரச அதிகாரிகளை ஜனாதிபதி கடுமையாக விமர்சித்து மக்கள் மத்தியில் ஏளனத்துக்குள்ளாக்கியுள்ளமை ஜனாதிபதிக்கு பொருளாதார ரீதியில் எவ்வித ஆக்கப்பூர்வமான நுட்பம் கிடையாது என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.    பொருளாதார வீழ்ச்சிக்கும், மத்திய வங்கிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து பொருளாதார ரீதியில் எடுத்த தீர்மானங்களே பொருளாதார வீழ்ச்சியை துரிதப்படுத்தியுள்ளது என்பதை முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும். மத்திய வங்கிளின் பொறுப்பு நிதியமைச்சர் கீழ் காணப்படுகின்றது. ஜனாதிபதி மத்திய வங்கியின் ஆளுநர்களை கடுமையாக திட்டித் தீர்த்த பின்னர் தாங்கள் எவ்வித மறுப்போ, அல்லது நிதியமைச்சர் என்ற ரீதியில் நிலைப்பாட்டினையும் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. நியாயமான காரணிகளுக்கு நீங்கள் ஒருபோதும் குரல் கொடுக்க மாட்டீர்கள் என்ற காரணத்தினால் இந்த கடிதத்தை எழுதுகிறேன் என முன்னாள் நிதியமைச்சர் மங்கள் சமரவீர பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

 

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நமது நாட்டில் தற்போது நிலவும் சகல பொருளாதாரச் சிக்கல்களுக்காகவும் ஜனாதிபதி கடந்த வாரம் மத்திய வங்கியினை உணர்ச்சிவசப்பட்டுக் குறைகூறிய விதமே இப்பகிரங்க மடலை எழுதுவதற்குக் காரணமாகியது. உங்களுக்கு முன்னர் நிதியமைச்சர் பதவியினை வகித்தவன் என்கின்ற ரீதியில் இம்மடலினை எழுதுகிறேன். நிதிபொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி, மத்திய வங்கி மற்றும் திறைசேரி – முறையே நாணயக் கொள்கை மற்றும் அரசிறைக் கொள்கைக்கான பொறுப்புக்களைக் கொண்ட இரண்டு அரச நிறுவனங்கள் உங்களின் பொறுப்பின் கீழேயே வருகின்றன. அரசியலமைப்பு ரீதியாக எமது நாட்டின் பொருளாதாரத்தின் மேற்பார்வையாளர் நீங்களே. குடியரசின் நெறிப்படுத்தல் மற்றும் கட்டுப்பாட்டிற்கான பொறுப்பினைக் கொண்டிருப்பவர்’ ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ அல்ல அமைச்சர்களே என்கின்ற அரசியலமைப்பின் ஏற்பாட்டிற்கு நிச்சயமாக நீங்கள் கொண்டுள்ள இந்த அதிகாரம் தாமே கீழ்ப்படிகின்றது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளும் ஜனாதிபதியின் வசவுகளுக்கு ஆளானதும் அது பின்னர் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டதும் முன்னெப்பொழுதும் நடந்திராத நிகழ்வாகும். எமது குடியரசின் ஏழு தசாப்த கால நீண்ட வரலாற்றில் இவ்வாறான விதத்தில் அரசாங்கமோ அல்லது எதிர்க்கட்சியோ மத்திய வங்கியுடன் ஒருபோதும் பேசியதில்லை. கமராக்களின் பளீர் வெளிச்சத்தில் நிறுவனத்தினையும் அதன் அதிகாரிகளையும் மிகவும் வெட்கப்படும் விதத்தில் ஜனாதிபதியின் கோபக் குமுறல் பகிரங்கமாக அவமானப்படுத்தியுள்ளது. அரசாங்க அதிகாரிகளை இவ்வாறு கோபத்துடனும் ஆக்ரோசமான முறையிலும் பகிரங்கமாக ஏசித் தீர்ப்பது பலவீனமானவர்களை வலியோர் வதைப்பதையேன்றி வேறெதுவுமில்லை. இது விசுவாசத்தின் இரக்கமற்ற தன்மையினையும் இழிதன்மையினையும் பிரதிபலிப்பதுடன் எமது தேசத்தின் பிள்ளைச் செல்வங்களுக்கும் ஒரு துரதிர்ஷ்டவசமான முன்னுதாரணத்தினைக் காட்டி நிற்கின்றது. சில முறையற்ற அதிகாரிகளைக் கடிந்துகொள்ளத்தான் வேண்டும் என்பதைப் பல வருடங்களாகச் சேவையாற்றிய அமைச்சர்கள் என்கின்ற ரீதியில் நீங்களும் நானும் அறிவோம். நீங்களும் நானும் எமது பஙகிற்கு அதிகாரிகளை அவரவர் இருக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்கின்றோம். ஆனால் நாம் அதனை பகிரங்கப்படுததாமல் செய்திருக்கின்றோம்.

நிறுவனங்களினதும் பொதுமக்களுக்கு மௌனமாகச் சேவையாற்றும் அதிகாரிகளினதும கௌரவத்தினை நாம் எப்போதும் பொதுவெளியில் காத்திருக்கின்றோம்.
அரசாங்க அதிகாரிகளைப் பகிரங்கமாக அவமானப்படுத்துவதன் மூலம் களரிக் காட்சி நடத்தும் எத்தனிப்பினை நாம் எப்போதும் கட்டுப்படுத்தியே வந்திருக்கின்றோம். கடந்த வருடம் நவம்பர் வரையில் உங்களுக்கு முன்னர் நிதியமைச்சிற்குப் பொறுப்பாக சேவையாற்றியவன் என்கின்ற ரீதியில் மத்திய வங்கி மீது நியாயமற்ற முறையிலும் இங்கிதமற்ற முறையிலும் தொடுக்கப்பட்டிருக்கும் கடுமையான குற்றச்சாட்டில் இருந்து அதனைப் பாதுகாப்பது எனது கடமை என நான் நினைக்கின்றேன. விசேடமாக நீங்கள் இது தொடர்பாக மௌனம காக்கின்ற காரணத்தினால் அவ்வாறு நினைக்கின்றேன். தெளிவான காரணங்களுக்காக நீங்கள் வாய் திறக்க மாட்டீர்கள் என்பதனால் பொதுமக்களுக்கு உண்மையினைத் தெரிவிப்பது என் கடமையாகும். இலங்கையின் தற்போதைய பொருளாதார அவலங்கள் அடிப்படையில் அரசிற சார்ந்தவையேயன்றி நாணயம் சார்ந்தவை அல்ல. எனவே இந்த நெருக்கடியில் நாணயம வகிப்பது வரையறுக்கப்பட்ட வகிபாத்திரமே.

இருப்பினும் கூட மத்திய வங்கி பல பாரிய ஊக்கப்படுத்தல நடவடிக்கைகளைப் பொறுப்பேற்றுள்ளது. இவற்றுள் சில அதன் கடமைப் பரப்புக்கு அப்பாற்பட்டவையாகும் – எந்த அளவிற்கு சொன்னால்நாணயச் சபை மற்றும் அரச கடன் திணைக்கள உறுப்பினர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுப்பதற்குத் தம்மை அனுமதித்துள்ளனர். நான் இப்போது ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இல்லாமல் இருக்கின்ற காரணத்தினால் என்னால் பாராளுமன்றத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாது. ஜனாதிபதியின் குற்றச்சாட்டுக்களுக்கு உண்மையில் எவ்விதமான அடிப்படைகளும் இல்லை. அவரின் மிகப் பெரும் பதவியின் கேள்விகளுக்கும் அழுத்தங்களுக்கும் அவரால் ஈடுகொடுக்க முடியாதுள்ளது என்பதையே உண்மையில் அவை உணர்த்துகின்றன. அவருக்கு இருப்பது மிக அற்பமான பொருளாதார அரசியல் மற்றும் தீர்மானம் வகுத்தல் அனுபவமே என்பதைக் கருத்திற் கொள்கையில் இது ஆச்சரியமான ஒன்றல்ல. சுயாதீனத்தின் எவ்விதமான வெளித்தோற்றத்தினையும் மே 31 இல் அது இழந்துவிட்டது. நாணயச் சபையின் ஐந்து உறுப்பினர்களில் இரண்டு பேரை அவர்களின் ஆறு வருட பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னமே இராஜினாமாச் செய்யுமாறு கேட்ட முன்னெப்பொழுதுமில்லாத முற்கோபம் நிறைந்த நடவடிக்கையினை உங்களின் அரசாங்கம் எடுத்தது. துரதிர்ஷ்டவசமா இராஜினாமாச் செய்யுமாறு கேட்டதை நிறைவேற்றாவிட்டால் தங்களுக்குக் காத்திருக்கும் பிரச்சார அதிர்ச்சித் தாக்குதலைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினாலோ என்னவோ அவர்கள அனைவரும் கேட்கப்பட்டவாறே இராஜினாமாச் செய்தனர். இதன் விளைவாகஇ நாணயச் சபையின் மூன்று உறுப்பினர்களும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டனர்.

உண்மையில் பெரும்பான்மையினர் (ஆளுநர் மற்றும் திறைசேரிச் செயலாளர்) ஜனாதிபதியினதும் நிதி அமைச்சரினதும் விருப்பத்திற்கேறப செயற்திறனுடன் சேவையாற்றுகின்றனர். எவ்வாறாயினும் மத்திய வங்கியின் அரசியல் மயமாக்கத்தினை முன்னெடுப்பது நீங்களல்ல. ஆனால் ஆட்சியின் உண்மையான உயர்மட்ட அதிகாரியே என்பது இப்போது பகிரங்கமான இரகசியமாகும்.

ஆகவே மத்திய வங்கியின் அதிகாரிகளை விடுத்து பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை வகுப்பதில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.