அனைத்து பள்ளிவாசல்களினதும் ‘பைத்துல்மால்’ கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்கின்றார் அதாஉல்லா

 

உலக நாடுகள் அனைத்தும் COVID-19 அசாதாரண நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் எமது உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டவும் தேவையுடைய குடும்பங்களுக்கு எதிர் வருகின்ற ரமலான் மாதத்தில் உதவுவதற்காகவும் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் ,ஜம்மியத்துல் உலமா மற்றும் அனைத்து சமூக நலன்புரி அமைப்புக்களையும் உள்ளடக்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது .

 

இக்குழுவினர் இன்று முன்னாள் அமைச்சரும் , தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்எ.ம் அதாஉல்லா அவர்களை நேற்று மாலை கிழக்கு வாசலில் சந்தித்து கலந்துரையாடினர் .

இக் கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஏ.எல்எ.ம் அதாஉல்லா,


இன்று காணப்படும் இவ்வசாதாரண சூழ்நிலை தொடருமானால் எமது எல்லா நிலை மக்களுக்குமான உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் , அதில் கூடிய கவனம் செலுத்தி தூர நோக்கோடு அனைத்து பள்ளிவாயல்களினதும் “பைத்துல்மால்” களும் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார் .

 

அதற்கான அவசரமானதும் காத்திரமானதுமான நடவடிக்கைகளை சம்மேளனம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் அரசாங்க அதிபர் மட்டத்தில் நடைபெறவேண்டிய செயற்பாடுகளுக்கும், அரசாங்க மட்டத்தில் பெறவேண்டிய உதவிகளுக்கும் தானும் முடியுமான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.

 

அண்மையில் வெளியான தேர்தல்கள் ஆணையாளரின் சுற்று நிருபத்திக்கேற்ப அரசியல் வாதிகளின் தலையீடுகளிலிருந்தும் இவ்வாறு பொதுப்பணி செய்யும் குழுக்கள் தவிர்ந்து சாதாரண மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

இதனை அடுத்து இந்த குழுவில் அங்கம் வகித்த எமதூர் முதல்வர் மற்றும் தவிசாளர் இருவரையும் விலகி இருக்குமாறு பணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.