கல்முனை மாநகர சபையை நான்கு சபைகளாக பிரிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தி

 கல்முனை மாநகர சபையை நான்கு சபைகளாக பிரிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தி.

மிக விரைவில் எல்லை நிர்ணய ஆணைக்குழு தங்களது பணியை ஆரம்பிக்க இருக்கின்றது.

கல்முனை மாநகர சபையில் இருந்து சாய்ந்தமருது நகரசபை பிரிப்பிற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 14/02/2020 ல் வெளியானதும் அதனை தற்காலிகமாக இடைநிறுத்திய செய்தியும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டிருந்தது.

ஏனைய சபைகளையும் , இலங்கையில் உள்ள மேலும் சில இடங்களிலும் புதிய சபைகளை உருவாக்கும் தேவையுள்ளதால் எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு எல்லை நிர்ணய குழு நியமிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது யாவரும் அறிவோம் .

அதற்காக இந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எல்லை நிர்ணய ஆணைக்குழுவை விரைவில் நியமிக்க உடன்பாடு காணப்பட்டதுடன் அதற்கு முதல் ஏற்கனவே வெளியான வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தியே ஆணைக்குழு இயங்க வேண்டும் என்ற சட்ட ஏற்பாடுகளுக்கமைய நான்கு பேர் கொண்ட குழுவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவானது முன்னாள் அமைச்சின் செயலாளர் தலைமையில் மேலும் மூன்று நிருவாக சேவை அதிகாரிகளுமாக 4 பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மிக விரைவில் தங்களின் பணிகளை ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதனை இன்னும் 6 மாத கால இடைவெளியில் எல்லை நிர்ணயம் செய்து அறிக்கையை பொது நிருவாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிக்கு சமர்பிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.