“கட்சி தாவுபவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதியில்லை “-ரணில் ,மைத்திரி தீர்மானம் !

 

images

தேர்தலை இலக்காகக் கொண்டு பிரதான கட்சிகளுக்கிடையே கட்சி தாவுபவர்களுக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்காதிருப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தீர்மானித்துள்ளனர்.

நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில் தலைவர்கள் இருவரும் இது தொடர்பாக இணக்கப்பாடொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பொதுத்தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிலர் கட்சி தாவவுள்ளதாகவும் இவர்களில் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

இந்நிலையில் இரண்டு கட்சிகளின் தலைவர்களும் இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து மற்றைய கட்சியிலிருந்து தமது கட்சிக்கு வருபவர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு இடமளிக்காத வகையில் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.