இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் கல்முனை மக்களின் உணர்வுகளில் விளையாடிவிட்டு இதுவரையில் மெளனமாக இருப்பது ஏன்?

  1. இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் கல்முனை மக்களின் உணர்வுகளில் விளையாடிவிட்டு இதுவரையில் மெளனமாக இருப்பது ஏன்?

https://www.facebook.com/483381705154183/posts/1417212081771136?vh=e&d=n&sfns=mo

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் சம்மந்தமான கல்முனை சார்ந்த ஒரு விடயம் மிக வேகமான முறையில் தீயாக பரவி வருகின்றது என்பது யாரும் அறிந்த விடயமே..

இந்த விடயம் சம்மந்தமாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 மாநகர சபை உறுப்பினர்களினாலும் கடந்த 2ம் திகதி கல்முனை மாநகர சபை கூட்ட மண்டபத்தில் வைத்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் கடந்த 06/08/2019 அன்று நடந்த மேற்படி சம்பவம் தற்போது ஒரு வார காலமாக மிகத் தீவரமாக பரவியுள்ள நிலையில் இதுவரைக்கும் தன்னுடைய எந்தவொரு உத்தியோகபூர்வமான சமூக வலைத்தளங்களிலும் இந்த விடயம் பற்றி இராஜாங்க அமைச்சர் பைசால் காசிமினால் அறிக்கையிட்டு தெளிவுபடுத்தாமையானது அவர் கல்முனை மக்களின் உணர்வுகளையும்,பொறுமையையும் இன்னும் இன்னும் சோதிக்கின்றார் என்பதுதான் உண்மை.

எனவே இது விடயத்தில் எந்த நோக்கத்திற்காக, எந்த சூழ்நிலையில்,எவ்வாறான நிலைப்பாட்டில் தான் இவ்வாறு பேசினேன் என்பது பற்றியும் இதில் ஏதும் பிழைகள் இருந்தால் கல்முனை மக்கள் என்னை பொறுத்துக்கொள்ளுங்கள் என்று அவர் இது வரைக்கும் அறிக்கையிடாது இருப்பது பல வகைகளில் கல்முனை மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் ஹரிஸ் வெளியேறி போகலாம் என்று சொல்வதற்கு பைசால் காசிமுக்கோ, தலைவருக்கோ,செயளாலருக்கோ, பொருளாளருக்கோ யாருக்கும் உரிமை கிடையாது.யாரையும் யாரும் வெளியேற்ற முடியாது.அதனை தீர்மானிப்பது மக்கள்.இது மக்களின் உணர்வுகளினாலும் தியாகங்களினாலும் உருவாக்கப்பட்ட கட்சி.இதில் நீங்கள் யாரும் நினைத்தால் போல பேசுவதற்கும் உரிமை கொண்டாடுவதற்கும் உரித்துரியவர்கள் அல்ல.

 

மறைந்த தலைவர் அஸ்ரப் உட்பட பல்வேறுபட்ட அரசியல் தலைவர்களினால் கல்முனை என்பது முஸ்லிம்களின் இதயம்,முஸ்லிம்களின் தலை நகரம் என்று வர்ணிக்கப்பட்ட நிலையில் அதை கொச்சப்படுத்தி தன்னுடைய சுயநல அரசியலுக்காக இராஜாங்க அமைசார் பைசால் காசிம் பேசி இருப்பதனை கல்முனையான் யாரும் அனுமதிக்கமாட்டோம்.அவர் தான் பேசிய பேச்சின் தன்மையினையும் நிலைப்பாட்டினையும் தெளிவுபடுத்தாத வரை அவர் கல்முனையில் அரசியல் நடவடிக்கைகளிலோ,மேடைகளிலோ பேசுவதனை யாரும் அனுமதிக்கமாட்டோம் என்பதனையும் கல்முனை மக்கள் சார்பாக தெரிவித்து கொள்ளுகின்றோம்.

சர்ஜுன் லாபீர்
முஸ்லிம் காங்கிரஸ் போராளி
கல்முனை.