பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீ.சு.க. ஆதரவளிக்காது -மைத்திரி

Maithripala-Sirisena

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தாம் தலைமை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்வித ஆதரவையும் வழங்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்குவதா அல்லது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதா என இரண்டில் ஒன்றை தெரிவு செய்யுமாறும் ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உறுதியான நிலைப்பாட்டில் இருந்தவாறு பேசியுள்ள ஜனாதிபதி, தான் உயிருடன் இருக்கும் வரை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த எந்த வாய்ப்பும் இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 
 

– See more at: http://www.thinakkural.lk/article.php?local/kxvgkrxcap4373a11880669417619mc1lxc9d9b1091fe94039ae462aqvtje#sthash.5NxNsrNj.dpuf