எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரியின் பவள விழாவில் பிரதமர் , அமைச்சர் றிசாட் பங்கேற்பு

“கிராமத்தின் வளர்ச்சியும் பொருளாதாரஎழுச்சியும்

கல்வியின் முன்னேற்றத்திலேயேதங்கியுள்ளது”.

எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்தியகல்லூரி நிகழ்வில் அமைச்சர் றிஷாட்.

ஊடகப்பிரிவு

ஒரு கிராமத்தின்வளர்ச்சியும்,பொருளாதார எழுச்சியும், செழுமையும் அந்த கிராமத்தின் கல்விமுன்னேற்றத்திலே  தான் தங்கியுள்ளதாகஅகில இலங்கை மக்கள் காங்கிரசின்தலைவரும் அமைச்சருமான ரிஷாட்பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம்மத்திய மகாவித்தியாலயத்தின்  75வதுவருட  பவளவிழாவும் நூர்தீன் மஷூர்பார்வையாளர் அரங்குஅங்குரார்ப்பணமும்  இன்று காலை (12) இடம்பெற்றபோது விசேட அதிதியாகஅமைச்சர் கலந்துகொண்டார். பாடசாலை அதிபர் முஹமட் ஷாபிதலைமையிலான இந்த நிகழ்வில் பிரதமஅதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கபங்கேற்றார்.

அமைச்சர் கூறியதாவது,

மன்னார் மாவட்டத்திலே எருக்கலம்பிட்டி கிராமம் வரலாற்று பெருமை மிக்கது   இங்குஅமைந்துள்ள   எருக்கலம் பிட்டிமுஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தில்கல்வி கற்ற பலர் நாடளாவிய ரீதியில்  உயர் நிலையில் இருக்கின்றனர். இலங்கையில் எந்தப்பாகத்திற்குசென்றாலும்  அங்கு உயர்பதவிகளில்பணிபுரியும்  பலர், தாங்கள் எருக்கலம்பிட்டி மத்தியகல்லூரியின்பழைய மாணவர் எனப்  பெருமைகொள்வதை கேட்டிருக்கின்றேன். நமது  சமூகத்துக்கும்  நாட்டுக்கும்  தனதுவாழ்நாளை  அர்ப்பணித்த மர்ஹூம்பேராசியர் ஹஸ்புல்லாஹ், இந்தகிராமத்தில் பிறந்தவர். அவர்கல்வித்துறையிலே  ஓர் அரியபொக்கிஷமாக போற்றப்பட்ட சிறந்தகல்விமான். அதேபோன்று வைத்தியநிபுணர்களான  இனாயத்துல்லாஹ், எஸ்.எப்.எல்.அக்பர் உட்பட வெளிநாட்டுசேவைகள், நிர்வாக, பொறியியல்,சுங்க,கணக்காளர்சேவைகள் , சட்டத்துறை, மருத்துவத்துறை   உட்பட இன்னும் பல்துறை சார்ந்த  அநேகர்  இந்தநாட்டிலும் வெளிநாடுகளிலும்உயர்நிலையில் இருப்பது இந்தமண்ணுக்குகிடைத்த கீர்த்தியே.

இந்த ஊரில் பிறந்து இந்தபாடசாலையில் கல்விகற்ற உங்கள்மண்ணின் மைந்தனான மர்ஹூம் நூர்தீன்மஷூர்  கல்வி வளர்ச்சிக்காக செய்ததியாகங்களையும்அர்ப்பணிப்புக்களையும் நாம்நினைத்துப்பார்க்கிறோம்.அதுமாத்திரமின்றி மன்னார் மாவட்டத்தில்பேதங்கள் இன்றி அன்னார்  பணியாற்றியிருக்கிறார்.அத்துடன்முன்னாள் எம்பிக்களான அபூபக்கர், சூசைதாசன் ஆகியவர்களும் இந்தபாடசாலையில் கல்விகற்றுஉயர்நிலைக்கு வந்தவர்களே.

 

மட்டுமின்றி  இந்த ஊரையும், இந்தபாடசாலையும் முன்னேற்றுவதற்காக  உழைத்த பலர் இன்றுமாரணித்துவிட்டனர். அவர்களின்தியாகங்களுக்கும், அர்ப்பணிப்புகளுக்கும் தூய்மையானசேவைகளுக்கும் இறைவன் நற்கூலிவழங்க பிரார்த்திக்கின்றேன்.

பிரதமருடன்  இந்த பாடசாலைக்குஇன்று  விஜயம் செய்தபோது இந்தகல்லூரியின் சாதனைகள் மற்றும்  எருக்கலம்பிட்டி கிராமத்தின்தொன்மைபற்றி அவரிடம்எடுத்துக்கூறினேன்.முன்னாள் ஜனாதிபதிஜே ஆர் ஜெயவர்த்தனவின்  காலத்தில்கட்டப்பட்டு, தற்போதுஉடைந்துகிடக்கும் இந்தபாடசாலையின் கட்டடத்தைமீளக்கட்டியெழுப்பி தருவதாக பிரதமர்உறுதியளித்தார்.

 

மன்னார் மாவட்டத்திலே ஏனையகிராமங்களுடன்  ஒப்பிடும்போதுஎருக்கலம்பிட்டி மக்கள் கல்விக்காகதங்களை  அர்ப்பணிப்பவர்கள்  கட்சி,கொள்கை  வேறுபாடுகளுக்குஅப்பால் கிராமத்தின் முன்னேற்றத்தில்ஒற்றுமையுடனும் கட்டுக்கோப்புடனும்செயற்படுபவர்கள் அவர்களின்அக்கறையையும் அயராத உழைப்பையும் நான் மெச்சுகின்றேன் அதேபோன்று பழைய மாணவர்கள் இந்த ஊரின்வளர்ச்சிக்காகவும் பாடசாலையின்உயர்வுக்காகவும்  இரவுபகலாகஉழைத்துவருகின்றனர் . வடமாகாணத்தில் முஸ்லிம்கிராமங்களிலேயே  பெரிய கிராமமாகதிகழும்  எருக்கலம்பிட்டி  ஏனையகிராமங்களுக்கு முன்னுதாரணமாகவும்ஒற்றுமையின் சிகரமாகவும்விளங்குகின்றது.

 

இடப்பெயர்வினால் இந்த பாடசாலை  உட்பட பல பாடசாலைகள்  மூடப்பட்டுகிடந்த கறைபடிந்த உண்மையைஇப்போது நினைக்கவேண்டியுள்ளது சமாதானம் ஏற்பட்ட பின்னர் படிப்படியாகஇயல்புநிலை ஏற்பட்ட போது குறைவானமாணவர்களுடன் பாடசாலைகள் மீளஆரம்பிக்கப்பட்டன.

 

இடப்பெயர்வுக்கு பின்னர் இந்தகிராமமக்கள் புத்தளம்  நாகவில்லுவில் வாழ்ந்துவருகின்றனர். மர்ஹூம்முன்னாள் அமைச்சர் மஷூரின்உருவாக்கப்பட்ட இந்த நாகவில்லுகிராமத்தில் வாழ்கின்ற எருக்கலம்பிட்டிமக்களும்  இந்த விழாவில்பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி தருகின்றதுஎன்றும்  அமைச்சர் தெரிவித்தார்..

 

இந்த நிகழ்வில் முன்னாள்அதிபர்களுக்கு நினைவு சின்னங்களும்வழங்கப்பட்டது.பாடசாலையின்அபிவிருத்தி சங்க செயலாளர் நியாஸ், பழைய மாணவர் சங்க செயலாளர்லுக்மான்,வலயக்கல்விப்பணிப்பாளர்பிரட்லி,பிரதேசபை தவிசாளர்களானமுஜாஹிர்,செல்லத்தம்பு,சுபியான் மற்றும்முன்னாள் மாகாணசபைஉறுப்பினர்களானறிப்கான,நியாஸ்,உட்படமுக்கியஸ்தர்கள் பலரும்பங்கேற்றிருந்தனர்.


erukkalampitti