மன்னார் ஆயருடன் அமைச்சர் ரிஷாத் சந்திப்பு

 

ஊடப்பிரிவு-

மன்னார் மாவட்ட  ஆயர் இம்மானுவேல் பர்ணார்ந்து  அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் இன்று காலை (௦1) ஆயர் இல்லத்தில் சந்தித்து பேசினார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டிலும் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வுகள் மற்றும் சந்தேக பார்வையை நீக்கி பரஸ்பர சமூகங்களுக்கு இடையே நல்லெண்ணத்தையும் கட்டி எழுப்புவதன் அவசியம் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

 

எதிர் காலத்தில் மன்னார் மாவட்டத்தில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் உரையாடினர்.

மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் குறிப்பாக மாவட்டத்தின் முக்கிய தொழிலான விவசாயம், மீன் பிடி ஆகியவற்றை விருத்தி செய்வதற்கான திட்டங்கள் குறித்தும் பரஸ்பரம் பேசினர். தொழினுட்ப கல்வியை விருத்தி செய்து இளைஞர்  யுவதிகளின் தொழில் வாய்ப்பை அதிகரிப்பதற்கான திட்டங்களை பரஸ்பரம் இருவரும் கலந்துரையாடியதோடு, கிறிஸ்தவ, இஸ்லாமிய, இந்து மக்களின் ஒற்றுமை தொடர்பில் ஆயர் நல்ல பல ஆலோசனைகளையும்   முன்வைத்தார் .