போதைக் குற்றச்சாட்டுக்களுக்குள் வளைக்கப்படும் மூன்றாம் தேசம்

 

சுஐப் எம் காசிம்

மூன்றாம் சமூகத்தின் சிவில் வாழ்க்கையைசங்கடத்துக்குள்ளாக்கும் புதிய விடயமாக போதைக்குற்றச்சாட்டுக்கள் தலையெடுத்துள்ளதை சமீபகாலமாகஅவதானிக்க முடிகின்றது. பொதுவாக பாதாளஉலகத்தினருடன் தொடர்புள்ள சில முஸ்லிம் இளைஞர்களின்தொடர்பும் , சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடும் முஸ்லிம்வர்த்தகர்களின் பெயர்களும் இந்த போதைக்குற்றச்சாட்டுக்களால் வளைக்கப்படுகின்றமை முஸ்லிம்களின்சிவில் சமூக வாழ்க்கைக்கும் பெரும் அச்சுறுத்தலாகிவருகின்றன.காலிக் கடற் கரையில் கைப்பற்றப்பட்ட கப்பலில்பாரிய தொகையளவில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள்பேருவளைப் பகுதிக்கு கொண்டு செல்லப்படவிருந்த, தகவல்கள் முஸ்லிம் சமூகத்தை இந்த வம்புக்குள் திணிக்கும்முயற்சிகளாகப் பார்க்கப்பட்டிருந்தன.ஆனால்இதற்குப்பின்னாலிருந்த தரகர்களின் விபரங்கள் முஸ்லிம்இளைஞர்களையும் இக்கடத்தல்களுடன்தொடர்புபடுத்தியிருந்தது.

பாதாள உலகத்தினரு டன் தொடர்புற்றிருந்த சிலர்நாளாந்த வாழ்க்கைப் பிழைப்பை ஓட்டிச்செல்வதற்கானவருமானமாக சில குற்றச் செயல்களைப் புரிவதாகவேஇத்தனை காலமும் கருதப்பட்டு வந்தது.ஆனால் ஒப்பந்தக்கொலைகள்,கடத்தல்கள், கடல்வழிக் கொள்ளைகள்வெளிநாட்டு வங்கிகளில் நிதி,கிரடிற் கார்ட் மோசடிகளில்ஈடுபடுமளவிற்கு சில இளைஞர்கள்பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் வெளியேவந்துள்ளன.

 

வடக்கு கடற்பரப்பு புலிகளின் பாதுகாப்பிலிருந்துகைநழுவியமை,ோருக்குப் பின்னர் கடற்படையினரின்ரோந்து சேவைகள் பாரியளவில் குறைந்தமைஆகிய இடைவெளிகளே கடல்வழியூடான போதைக்கடத்தல்களை அதிகரித்திருக்கும்.

 

சுதந்திரமாக விடப்பட்டுள்ள நாட்டின் கடற்பரப்பைபயன்படுத்தும் பாதாள உலகத்தினரின் செயற்படு தளம் பரந்துவிரிந்துள்ள மைக்கு அண்மைக்கால கடத்தல்கள், கைதுகளைபாதுகாப்புத் தரப்பு ஆதாரங்களாக முன்வைக்கின் றது. வடக்கிலிருந்து கைப்பற்றப்படும் போதைப்பொருட்களும்,ெற்கில் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் நிரப்பிய கப்பல்களும் இதற்குப் பின்னாலுள்ளசர்வதேச வியாபாரிகளும், வெளிநாட்டுசக்திகளால் இயக்கப்படுவதாக முடிச்சுப்போடும் முயற்சிகளும்தற்போது ஆரம்பமாகியுள்ளன.

 

இந்த முயற்சிகள் வெற்றியளிக்க வேண்டுமென்பதில்கடும்போக்காளர்கள் குறியாகச் செயற்படுவர்.பொருளாதாரத்தில் முஸ்லிம்கள் முன்னணியில் திகழ்வதைத்தப்புக்கணக்கில் நோக்கும் சில பௌத்த,இனவாதகடும்போக்குகள் போதைக் குற்றச்சாட்டுக்களுக்குள் மூன்றாம்தேசத்தை வளைத்துப் போட, நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கின்றன.

 

இந்நிலையில் துபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகந்துரமதுஷின் பிரதான சகாக்காளென நம்பப்படும் முஸ்லிம்இளைஞர்களின் வகிபாகமே மூன்றாம் சமூகத்தின் சிவில்வாழ்க்கையை அந்நிய சமூகத்தினர் மத்தியில்சந்தேகத்திற்குரிய தாக்கியுள்ளது. இது தவிரதெமட்டகொடை, பஞ்சிகாவத்தை, மருதானை,ாளிகாவத்தை ஆகிய முஸ்லிம் பிரதேசஇளைஞர்கள் கைதாவதும் இச்சந்தேகத்தை வலுவடையச்செய்துள்ளது.இந்தப் போதைக் குற்றங்களுக்குள் அகப்படும்முஸ்லிம் பெயர்களையுடைய இளைஞர்களின் பூர்வீகம், அவர்களது பழக்க வழக்கங்கள், சமய அனுஷ்டானங்களில்அவர்களுக்குள்ள பங்களிப்புகளை ஆராய்ந்து இவர்கள் பற்றியசமூக அந்தஸ்த்தை, அடையாளங்களை தேசிய மட்டத்தில்உணர்த்தும் பொறுப்பிலிருந்து அரசியல் தலைமைகள்மாத்திரமன்றி மதத் தலைமைகளும்  நழுவிவிட முடியாது. அந்தளவிற்கு குற்றச்சாட்டின் நிலைமைகள்கடினமடைந்துள்ளன.

 

போதைக் குற்றங்கள் மட்டுமன்றி,ைபர் குற்றங்களில்ஈடுபடுவதற்கும் இவ்வாறான இளைஞர்களின் மூளைகள்சலவை செய்யப்பட்டுள்ளதாக இது வரைக்கைதானோரிடம்நடத்தப்பட்ட விசாரணைகள் நாட்டின் பாதுகாப்புத்துறையைஎச்சரித்துமுள்ளது.பள்ளிவாசல்களில் துப்பாக்கிப் பிரயோகம்நடத்துமளவுக்கு பாதாள உலகக் கோஷ்டிக்குள் முரண்பாடுகள்வளர்ந்துள்ளதே. ஏன்? மாளிகாவத்தை,அப்பிள்தோட்டங்களில் அடிக்கடி இடம்பெறும் தனி நபர்களைஇலக்கு வைத்த துப்பாக்கித் தாக்குதல்கள், போதைக்கடத்தல்வருவாய்களைப் பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்டதகராறென்றும், சாட்சிகளின் இரகசியங்களைப்பாதுகாப்பதற்கான பிரயத்தனங்களாகவும் இப்போது தெரியவந்துள்ளது.

 

அரசியல் விவகாரங்களில் மாத்திரமன்றி சமூகத்தைசங்கடத்துக்குள்ளாக்கும் இவ்வாறான விடயங்களிலும்சமூகத்தலைமைகள் அக்கறை செலுத்தும் காலங்களிலேஇப்போது மூன்றாம் சமூகம் காலடிவைத்துள்ளது.இன்றையகால நிகழ்வுகள் இதனையே உணர்த்தி நிற்கின்றன.

 

ஹராம், ஹலால்,ஹபாயாக்கள் மதத் தீவிரவாதமென ஒருகாலத்தில் நெருக்குதலுக்குள் திணிக்கப்பட்ட முஸ்லிம்சமூகம் பின்னர் வக்பு சட்டம்,ஷரீஆச் சட்டம், இளவயதுத்திருமணம், என்று சமய அனுஷ்டானங்களிலும் கெடுபிடிகளைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டது. இவ்வாறானகெடுபிடிகள், தீண்டல்களின் தொடர்ச்சிகள் தற்போதுபோதைவஸ்து, ஹெரோயின்,ுடுக் கடத்தல்கள் எனமுஸ்லிம்களைத் தொடர்ந்து  துரத்தி வருகின்றமை மூன்றாம்இனத்தினரை (முஸ்லிம்) அந்நிய மனோபாவத்தில் சிந்திக்கவைத்துள்ளது. உண்மையில் இந்த போதை வஸ்து வியாபாரக்கடத்தல்களுடன் முஸ்லிம் இளைஞர்கள்தொடர்புபட்டுள்ளனரா? அல்லது தெரியாமல் இவர்கள்மாட்டிக் கொள்கின்றனரா? இல்லாவிட்டால் பணம்இலகுவாகச் சம்பாதிக்க கடத்தல்களுக்குத் தரகர்களாகச்செயற்படுகின்றனரா? இவற்றையே முஸ்லிம் சமூகஅமைப்புகள் கூட்டாக ஆராய வேண்டும்.

 

இந்த ஆராய்ச்சிகளின் தொகுப்பை சமூக ஆவணமாகக் கருதிபாதுகாப்பு தரப்பினரிடம் ஒப்படைக்கும் பொறுப்பும் முஸ்லிம்சமூகத் தலைமைகளுக்கு உள்ளது. இது தொடர்பான கூட்டுச்செயற்பாடுகளை பள்ளிவாசல் நிர்வாகங்கள்.உலமா சப,முஸ்லிம் அமைப்புக்கள் என்பன அரசியல் தலைமைகளுடன்இணைந்து செயற்படுத்துவதே எமது எதிர்காலம் மீதானநெருக்குதல்களிலிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கும்.

 

 ஒரு சில முஸ்லிம் இளைஞர்கள்,வர்த்தகர்களின்பொறுப்பற்ற போக்கிரிச் செயற்பாடுகளால் முழுமுஸ்லிம்களதும் வர்த்தக நிலையங்கள், வீடுகள் பாதுகாப்புபடையினரால் சல்லடையாக்கப்படுவது சமூகமொன்றின்மீதான உரசல்களாகவே கருதப்படும்.

 

முஸ்லிம் நாடுகளில் இயங்கும் இஸ்லாமியஅடிப்படைவாதிகளின் தொடர்பிலே இந்த போதை வஸ்துக்கடத்தல்கள் இடம் பெறுவதாக முடிச்சுப் போட சில கடும்போக்குகள் காத்திருப்பதாகவும் ஒரு தகவல்.

 

ஐரோப்பிய யூனியனின் பொருளாதாரத் தடைகளையும் மீறிஐந்து வருடங்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தமைபொப்பிஎனப்படும் ஒரு வகை போதை வியாபாரத்தால்என்பது பலரது அபிப்பிராயம்.

 

இவ்வாறு காட்டுவதனூடாக மூன்றாம் இனத்தின்இருப்பு,அமைதியைக் கெடுபிடியாக்கி இஸ்லாத்துக்குஎதிரான நிந்தனைகள், அழுத்தங்களை அதிகரிப்பதும்இப்போக்குகளின் எதிர்காலத் திட்டமாக இருக்கலாம். இத்திட்டங்களால் முஸ்லிம்களை அச்சுறுத்தி அவர்களின்உரிமைக் குரல்வளைகளை ஒடிப்பதற்கானசந்தர்ப்பங்களாகவே போதை  வஸ்துக்கடத்தல்,வியாபாரங்ளில் முஸ்லிம்க ளுக்குள்ள தொடர்புகள் முடிச்சுப்போடப்படவுள்ளன. .இவ்வாறு போடுவதனூடாகசமூகச் சூறையாடல்களுக்கு எதிரான முஸ்லிம்தலைமைகளின் குரல்களை ஏதிலியாக்கவும்முயற்சிக்கப்படலாம்.புனித நோன்பு காலத்தைஎதிர்நோக்கவுள்ள நிலையில் வீண் தர்க்கங்கள், சந்தேகங்களை களைவது மூன்றாம் சமூகத்தின் அரசியல்தலைமைகள் மீது சுமத்தப்பட்டுள்ள அவசரபொறுப்புக்களாகும்.

 

எனவே அரசியல் தலைமைகள்,மத அமைப்புகள் பள்ளிவாசல்சம்மேளனங்கள் இவ்விடயங்களில் அவசரமாகக் கவனம்செலுத்த வேண்டும். ஜும்ஆ பிரசாரங்களிலும் போதை வஸ்து, சமூக மோசடிகள் குறித்து இஸ்லாம்வழங்கியுள்ள எச்சரிக்கைகளை அடிக்கடி ஞாபகமூட்டுவதும்ஒரு சமூகக் கடமையாக உள்ளதை எவரும் மறுக்க முடியாது.