May 20th , 2019 12:02 AM
Hot News
நாட்டை மீட்டெடுக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்;ஆத்மீக ,அரசியல் , சிவில் சமூக பிரதிநிதிகள் உருக்கமான கோரிக்கை!|பயங்கரவாதத்துக்கு எதிராக ஒத்துழைக்கும் முஸ்லிம்கள் மீதான நெருக்குவாரங்கள்|ஓமானுக்கு சென்றிருந்த அமைச்சர் குழு நாடு திரும்பியுள்ளனர்|புதிய பிரதம நீதியரசராகிறார் ஜயந்த ஜயசூரிய|(வீடியோ)அக்கரைப்பற்று பல.நோ.கூ. சங்க பொதுச்சபை கூட்டத்தில் நடந்தது என்ன ?|நான்கு குழந்தைகளை பிரசவித்த விமானப்படை உத்தியோகத்தருக்கு நியுதவி வழங்கிய ஜனாதிபதி|நஸீர் எம்.பியின் முனமாதிரியும் இருளில் மறையும் கறுப்பாடுகளும் – (கலாபூஷணம் மீரா)|இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மற்றும் அமைச்சர் றிசாத் சந்திப்பு|வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடல்|வெள்ளவத்தையில் அடாத்தாக காணிபிடித்துள்ள பெளத்த மதகுரு வில்பத்தை முஸ்லிம்கள் அழிப்பதாக நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்
  • Home »
  • Slider »
  • நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை சீரற்றதாக இருக்கிறது என்கின்றார் விராட் கோலி

நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை சீரற்றதாக இருக்கிறது என்கின்றார் விராட் கோலி

களத்தடுப்பு மோசமாக இருந்த காரணத்தினால்தான். நாங்கள் தோல்வியடைந்து வெற்றி வாய்ப்பை நழுவ விட்டோம் என இந்திய அணித் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

மொகாலியில் நேற்று அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற நான்காவது ஒருநாள் தொடரில் அடைந்த தோல்வி குறித்து கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், 

எங்களது களத்தடுப்பு மிகவும் மோசமாக இருந்தது. இதனால் நாங்கள் வெற்றி வாய்ப்பை தவற விட்டோம். அவுஸ்திரேலியா பேட்டிங் செய்யும் போது பனி பொழிவு முக்கிய பங்கு வகித்தது. 

பனி பொழிவு குறித்து இரண்டாவது முறையாக தவறாக கணித்து விட்டோம். இதனால் பந்து வீசுவது சவாலாக இருந்தது. பனி பொழிவு பந்து வீச்சை சேதப்படுத்தி விட்டது.

டர்னர் சிறப்பாக விளையாடி ஆட்டத்தின போக்கை மாற்றிவிட்டார். இதேபோல் ஹேண்ட்ஸ்கோம்ப், உஸ்மான் கவாஜாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த சேசிங்கை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

அத்துடன் இன்னும் கடினமாக உழைத்து அடுத்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற முயற்சிப்போம்.

நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை சீரற்றதாக இருக்கிறது. ஒவ்வொரு ஆட்டத்திலும் டி.ஆர்.எஸ். பற்றி விவாதிக்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.
-நிருவாகம்-

Leave a Reply

*