பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள விமானப்படை விமானி அபிநந்தன் சென்னையைச் சேர்ந்தவர்

மிக் 21 பைசன் போர் விமானத்தில் சென்ற அபினந்தன் என்ற இந்திய விமானப்படை விமானி மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவம், 46 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உள்ளவர் ”நான் இந்திய விமானப்படை அதிகாரி. எனது எண் 27981” எனக்கூறுகிறார்.

பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள விமானப்படை விமானி அபிநந்தன் சென்னையைச் சேர்ந்தவர் தாம்பரம் விமானப்படை மையத்தில்தான் பயிற்சி பெற்று 2004ம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் இணைந்து சேவையாற்றி வருகிறார் விங் கமாண்டர் அபிநந்தன்.

இவரது தந்தை வர்தமானும் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

R.SIVARJAA