பள்­ளி­களை நிர்­மா­ணிக்க புத்­த­சா­சன அமைச்சின் அனு­மதி தேவை­யில்லை : புத்­த­சா­சன அமைச்சு

புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­படும் மத தலங்­க­ளுக்கு புத்­த­சா­சன மற்றும் மத விவ­கார அமைச்­சிடம் அனு­மதி பெறப்­பட வேண்டும் என 2008.10.16 அன்று வெளி­யி­டப்­பட்ட சுற்று நிருபம், பௌத்த மத தலங்­க­ளுக்கு மாத்­தி­ரமே செல்­லு­ப­டி­யாகும் எனவும் ஏனைய மத தலங்­களை நிர்­மா­ணிப்­ப­தற்கு  புத்­த­சா­சன அமைச்சின் அனு­மதி பெற்­றப்­பட வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்றும் குறித்த அமைச்சு உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.


மேற்­படி சுற்று நிரு­பத்தை பௌத்த சமயம் தவிர்ந்த ஏனைய சம­யங்­களும் பின்­பற்ற வேண்­டுமா என விளக்­க­ம­ளிக்­கு­மாறு கோரி, முஸ்லிம் கவுன்சில் அமைப்பின் உப தலைவர் ஹில்மி அகமட் தகவல் அறியும் உரிமைச் சட்­டத்தின் கீழ் மேற்­கொண்ட விண்­ணப்­பத்­திற்கே, புத்­த­சா­சன அமைச்சின் செய­லாளர் சந்­தி­ர­பெ­ரும கமகே இவ்­வாறு பதி­ல­ளித்­துள்ளார்.

இதே­வேளை  இந்து, கிறிஸ்­தவ மற்றும் இஸ்­லா­மிய சமய தலங்கள் வெவ்­வேறு அமைச்­சுக்­களின் கீழ் பதி­யப்­படும் நிலையில் அவற்­றையும் புத்­த­சா­சன அமைச்சின் கீழ் சட்ட ரீதி­யாக பதி­யப்­பட வேண்­டிய அவ­சியம் உள்­ளதா என மேற்­கொள்­ளப்­பட்ட விண்­ணப்­பத்­திற்கும் பௌத்த மத தலங்கள் மாத்­தி­ரமே புத்­த­சா­சன அமைச்சின் கீழ் பதி­யப்­பட வேண்டும் எனவும் அமைச்சின் செய­லாளர் மேலும் பதி­ல­ளித்­துள்ளார்.

அத்­துடன் புதிய மத தலங்­களை நிர்­மா­ணிப்­பது தொடர்பில் 2008.10.16 அன்று வெளி­யி­டப்­பட்ட குறித்த சுற்­று­நி­ரு­ப­மா­னது தொடர்ந்தும் பௌத்த மத தலங்களுக்கு பொருந்தும் என்றும்  புத்தசாசன அமைச்சின் செயலாளர்  சந்திரபெரும கமகே மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.                                                                                            -Vidivelli