ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் – பிசிசிஐ யிடம் முறைப்பாடு

 

Pepsi-IPL-8-Spot-Fixing-Case-News-And-UpdatesRajasthan_Royals_Logo.svg

 

 

2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சூதாட்டம் விவகார வழக்கே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தற்போது மீண்டும் ஒரு ஐபிஎல் சூதாட்டம் பூதம் கிளம்பி உள்ளது. ராஜஸ்தான் அணி வீரர் ஒருவர், “ஸ்போர்ட் பிக்சிங்கி”ல் ஈடுபட சக வீரர் ஒருவர் தனக்கு பணம் தருவதாக ஆசை காட்டியதாக பிசிசிஐ அதிகாரிகளிம் புகார் அளித்துள்ளார்.இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 ராஜஸ்தான் அணி வீரர் அளித்த புகாரின் அடிப்படையில் அவரிடம், பிசிசிஐ.,யின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அந்த வீரர் அளித்த வாக்குமூலத்தில், சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சி டிராபி போட்டியின் போது என்னுடன் விளையாடி சக வீரர் ஒருவர் உடைமாற்றும் அறையில், ஐபிஎல் போட்டிகளில் “ஸ்பார்ட் பிக்சிங்” செய்தால் நிறைய பணம் கிடைக்கும் என்று ஆசை காட்டினார். முதலில் விளையாட்டாக பேசிய அவர், பின்னர் சீரியசாக அத பற்றி கூறினார். அதற்கு நான் மறுத்து விட்டேன் என்றார். தன்னை சூதாட்டத்தில் ஈடுபட வற்புறுத்திய அந்த வீரர் ஐபிஎல்-8ல் விளையாடவில்லை எனவும் அந்த வீரர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

 ராஜஸ்தான் அணி வீரர் அளித்த புகார் மற்றும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து ஊழல் தடுப்பு மற்றம் பாதுகாப்பு பிரிவு தலைவர் ரவி சவானியிடம் கேட்ட போது, அது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். ராஜஸ்தான் வீரர் தனது புகாரை அறிக்கையாக கடந்த மாதமே பிசிசிஐ.,யிடம் அளித்துள்ளார். இருப்பினும் இந்த ஐபிஎல் சூதாட்ட திட்டம் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 2013ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தான் ராஜஸ்தான் அணி வீரர் ஸ்ரீசந்த் கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தான் அணி வீரர்கள், அதன் உரிமையாளர் ராஜ் குந்த்ரா, புக்கிகள், பிசிசிஐ தலைவரும் சென்னை அணி உரிமையாளருமான சீனிவாசன், அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் என பல பிரபலங்கள் மீது வழக்கும், கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. தற்போதைய ஐபிஎல் 8 தொடரில் ராஜஸ்தான் இன்று தனது முதல் போட்டியை விளையாட உள்ள நிலையில் அந்த அணி வீரர் ஒருவர் அளித்துள்ள சூதாட்ட புகார் மீண்டும் ஒரு ஐபிஎல் சர்ச்சையை கிளப்பி உள்ளது.