இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு வழக்கப்பட மாட்டாது – ஸ்வீடன் அகாடமி அறிவிப்பு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் இலக்கியத்தில் சிறந்து விளக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த நபரை ஸ்வீடன் நாட்டின் இலக்கிய  மன்றமான ஸ்வீடன் அகாடமி தேர்ந்தெடுத்து வருகிறது.

இந்நிலையில், ஸ்வீடன் அகாடமியில் உறுப்பினராக உள்ள கத்ரீனா புரோஸ்டென்சனின் கணவர் ஜீன் கிளவுட் அர்ணால்ட் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது. மேலும், முறையான அறிவிப்பிற்கு முன்னர் நோபல் பரிசு வெற்றியாளர்களின் பெயர் வெளியிடப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து, இந்தாண்டு வழங்கப்பட இருந்த  இலக்கியத்திற்கான நோபல் பரிசு அடுத்தாண்டு வழங்கப்படும் என ஸ்வீடன் அகாடமி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அகாடமி வெளியிட்ட செய்தியில், ‘தேர்வுக்குழு உறுப்பினர் மீதான பாலியல் புகார் காரணமாக மக்களுக்கு அகாடமி மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. அதனால் இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட மாட்டாது. அது அடுத்தாண்டு வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்த உயரிய விருது இதற்கு முன் உலகப்போர் காரணமாக 1940 முதல் 1943 வரை வழங்கப்படாமல் இருந்தது. அதன் பின் இந்தாண்டிற்கான விருது வழங்கப்படாது என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது