மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை விகிதாசார முறையின் கீழேயே நடாத்த வேண்டும் SLMC மற்றும் ACMC கோரிக்கை

ஏ.ஆர்.ஏ.பரீல்

மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை புதிய கலப்பு முறையில் நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. இதற்­கான எல்லை நிர்­ணயம் செய்­யப்­பட்டு குறித்த யோசனை விரைவில் பாரா­ளு­மன்­றுக்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வி­ருக்­கின்ற நிலையில் மாகாண சபை தேர்­தல்­களை பழைய விகி­தா­சார முறைப்­படி நடத்த வேண்டும் என முஸ்லிம் காரங்­கி­ரஸும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும் வலி­யு­றுத்­தி­யுள்­ளன.

 

 

மாகாண சபைத் தேர்தல் பழைய விகி­தா­சார தேர்தல் முறையின் கீழன்றி புதிய முறையின்கீழ் நடத்­தப்­படும் என மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா தெரி­வித்­துள்ள கருத்து தொடர்பில் வின­வியபோதே இவ்­விரு கட்­சி­களும் இவ்­வாறு வலி­யு­றுத்­தி­யுள்­ளன.

மாகாண சபைகள் அமைச்சர் பைஸர்

மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்ட அமைச்சர் பைஸர் முஸ்­தபா தெரி­விக்­கையில்,

மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்­காக பாரா­ளு­மன்றம் மாகாண சபை தொகுதி எல்லை நிர்­ணய அறிக்­கைக்கு அங்­கீ­காரம் வழங்க வேண்டும். அவ் அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மை­யி­னரால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும். எல்லை நிர்­ண­யத்தில் சில குறை­பா­டுகள் இருக்­கின்­றன. அவற்றில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு கட்­சித்­த­லை­வர்கள் தாம­திக்கக் கூடாது. சட்­டத்தில் திருத்­தங்கள் கொண்டு வரப்­பட வேண்டும். தற்­போது பாரா­ளு­மன்­றமே இது தொடர்பில் தீர்­மா­னிக்க வேண்டும்.

நாம் அனை­வரும் ஒன்­று­சேர்த்து முயற்­சித்தால் செப்­டெம்­பரில் நிச்­சயம் மாகாண சபைத் தேர்­தலை நடத்­தலாம். நான் எனது பெறுப்­பினை நிறை­வேற்றிவிட்டேன். தொடர்ந்தும் ஒத்­து­ழைப்பு வழங்­குவேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ்

எதிர்­வரும் மாகாண சபைத் தேர்தல் எல்­லோரும் ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய புதிய தேர்தல் முறை­யொன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டும்­வரை தற்­போது அமு­லி­லுள்ள விகி­தா­சார தேர்தல் முறையின் கீழேயே நடத்­தப்­பட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் செய­லாளர் நிஸாம் காரி­யப்பர் தெரி­வித்­துள்ளார்.

அவர் தொடர்ந்தம் கருத்து தெரி­விக்­கையில்;

“சிறு­பான்மை கட்­சி­க­ளுக்கும் சிறு கட்­சி­க­ளுக்கும் விகி­தா­சார தேர்தல் முறையே நன்மை பயக்கும். கபே போன்ற அமைப்­புகள் மற்றும் சிறு­பான்மை, சிறு கட்­சிகள் விகி­தா­சார தேர்தல் முறையே வலி­யு­றுத்­து­கின்­றன.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் விகி­தா­சார தேர்தல் முறை­யையே வலி­யு­றுத்­து­கி­றது” என்றார்.

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ்

எதிர்­வரும் மாகாண சபைத் தேர்தல் புதிய தேர்தல் முறையின் கீழன்றி பழைய விகி­தா­சார தேர்தல் முறையின் கீழேயே நடத்­தப்­பட வேண்டும் என்­பதில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் உறு­தி­யாக இருக்­கி­றது. அத்­தோடு மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்­ண­யத்­திலும் முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. அதனால் எல்லை நிர்­ண­யத்­திலும் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்றும் வலி­யு­றுத்­து­கி­றது என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் கைத்­தொழில் மற்றும் வணிக அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கை­யில்க்­கையில்;

“மாகாண சபைத் தேர்தல் ஒரு புதிய தேர்தல் முறையின் கீழ் நடத்­தப்­ப­டு­வதை அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தொடர்ந்தும் எதிர்த்து வரு­கி­றது.

உள்­ளூ­ராட்சித் தேர்தல் சட்­டத்­திலும் திருத்­தங்கள் கொண்டு­வரப்­ப­ட­ வேண்டும். புதிய உள்­ளூ­ராட்சி தேர்தல் முறை­யின்கீழ் எமக்கு அதி­க­மான உறுப்­பி­னர்­களைப் பெற்­றுக்­கொள்ள முடி­யு­மாக இருந்­தாலும் அதில் பல சிக்கல்கள் உருவாகியுள்ளன. அதன் பலனை இன்று நாடு அனுபவிக்கிறது. இது எமக்கு ஒரு பாடமாக அமையவேண்டும்.

மாகாண சபைத் தேர்தல் புதிய தேர்தல் முறையின் கீழன்றி பழைய தேர்தல் முறையின் கீழேயே நடத்தப்படவேண்டும் என்பதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது” என்றார்.