தனது பிரதமர் பதவியை பாதுகாத்துக்கொண்டார் ரணில் !!

 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிராக 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கூட்டு எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த மாதம் 21ம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த பிரேரணை மீதான விவாதம் இன்று காலை முதல் நாடாளுமன்றில் இடம்பெற்று வந்த நிலையில், சற்று முன்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. இதன்படி குறித்த பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வாக்கெடுப்பில் 26 பேர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணிலுக்கு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.