கல்முனை முதல்வராக ரகீப், முதல்வர் தெரிவில் சமூகத்துக்காக ஒற்றுமைப்பட்ட முஸ்லீம் கட்சிகள்

கல்முனை மாநகராட்சி கன்னி அமர்வு சற்று முன்னர் இடம் பெற்றது, சாய்ந்தமருது தோடம்பழ சுயேற்சைக் குழு மற்றும் தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் அமைர்வை பகிஷ்கரித்தனர்.

சபை முதல்வர் பிரதிமுதல்வர்களுக்கான தேர்வு இடம்பெற்றபொழுது உறுப்பினர்களின் வேண்டுகோலுக்கிணங்க வெளிப்படையாக வாக்கெடுப்பு நடத்தப் பட்டது.

முதல்வராக சட்டத்தரணி அபூபக்கர் ரகீப் அவர்கள் முஸ்லிம் காங்கிராஸ் சார்பிலும் ஹென்றி மகேந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பிலும் போட்டியிட்டனர், கூடுதலான வாக்குகளைப் (22) பெற்ற சட்டத்தரணி அபூபக்கர் ரகீப் முதல்வராக மாநகர ஆணையாளரினால் பிரகடனம் செய்யப்பட்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் வாக்களிப்பிலிருந்து தவிர்ந்து கொண்டார்.

இனாமுல்லாஹ் மஸீஹுதீன்