ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், மக்கள் காங்கிரஸும் இணைந்து இறக்காமம் பிரதேச சபையை கைப்பற்றியது..

-ஊடகப்பிரிவு-

 

இறக்காமம் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

 

வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த கலீலுர் ரஹ்மான் (தாஹிர்) 08 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 03 வாக்குகளும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 04 வாக்குகளும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 01 வாக்குகளுமாக 08 வாக்குகளைப் பெற்று அவர் தவிசாளர் ஆனார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 05 உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர்.

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த மௌலவி நௌபர் 08 வாக்குகளைப் பெற்று பிரதித் தவிசாளரானார்.

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட முக்கியஸ்தர்களுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முடிவை அடுத்தே, இறக்காமாம் பிரதேச சபையில் இந்தக் கூட்டு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஏற்கனவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை மற்றும் நிந்தவூர் பிரதேச சபைகளைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.