பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டமையால் பதவி விலகிய ஸ்மித் மற்றும் வார்னர்

 தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கேப் டவுன் நியூலேண்டில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் பான்கிராப்ட் ஒருவகை பொருளைக் கொண்டு பந்தை சேதப்படுத்தியது கேமரா மூலம் தெரியவந்தது.

இந்த பிரச்சினை பெரிய அளவில் வெடித்தது. பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியதை கேப்டன் ஸ்மித் ஒத்துக் கொண்டார். இதனால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆஸ்திரேலிய அரசு ஸ்மித்தை கேப்டன் பதவில் இருந்து நீக்க பரிந்துரை செய்தது.

இந்நிலையில் கேப்டன் ஸ்மித், துணைக் கேப்டன் வார்னர் ஆகியோர் கேப்டன் பதவியில் இருந்த விலக ஒப்புக் கொண்டனர். இதனால் கிரிக்கெட் வாரியம் அவர்களை உடனடியாக கேப்டன் பதவிகளில் இருந்து நீக்கியது. ஸ்மித்திற்குப் பதிலாக விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.