கண்டி வன்முறை தொடர்பான விசாரணைகள் குறித்து முக்கிய தகவலை பிரதமருக்கு தெரியப்படுத்திய பாதுகாப்புப் பிரிவு

கண்டி இனத்துவ தீவிரவாத வன்முறை தொடர்பான விசாரணைகள் 70 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் எஞ்சியுள்ள விசாரணைகளையும் துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமரிடம் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கண்டியில் இடம்பெற்ற தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகள் முடிவடையும் வரையில் அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டாம் என பாதுகாப்புப் பிரிவு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாதுகாப்பு சபையின் பிரதானிகள் பங்கெடுப்புடன் வாராந்தம் இடம்பெறும் பாதுகாப்பு மீளாய்வுக் கூட்டத்தில் வைத்து இந்த வேண்டுகோளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் பாதுகாப்புப் பிரிவு விடுத்துள்ளது