நாங்கள் கோழைகள் அல்ல, ஹர்த்தால் எதற்காக? : SM சபீஸ் கேள்வி

நாங்கள் கோழைகள் அல்ல, ஆனால் நடப்பவற்றை ஊகத்தினால் அனுமானிக்காமல் அறிவுகொண்டு சிந்திப்பதே மேலாகும்.

திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம் அம்பாறை முஸ்லிம்களின் சொத்துக்கள் மீதும் பள்ளிவாயல் மீதும் நடாத்தப்பட்ட காட்டு மிராண்டித்தனமாகும்.

இவர்களின் தேவைகள் என்ன? இவ்வாறான சம்பவத்தினை நடாத்த வேண்டும், அதன்மூலம் முஸ்லிம்கள் கிளர்ந்தெழுந்து ஹர்த்தால் செய்யவேண்டும்  நாடுமுழுதும் இதைப்பற்றின பேச்சுக்கள் மாத்திரமே இடம்பெறவேண்டும் என்பதே ஆகும். அப்போதுதான்  வங்குரோத்து அரசியல் தலைவர்கள்  தங்கள்மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை மக்கள் கண்டுகொள்ளாமல் இருப்பர் என்ற நம்பிக்கையாகும்.

இதற்கு எண்ணை ஊற்றவேண்டிய கட்டாயத்தில் நாம் விழுந்துவிடக்கூடாது.  

பாதுகாப்பு பிரிவின் உயர் அதிகாரிகளின் காரியாலயம்,மற்றும் அரசாங்க அதிபர் காரியாலயம் போன்றவற்றுக்கு அருகாமையில் நடாத்தப்பட்ட வன்முறைகளை அடக்க முடியாமல் கைகட்டி பார்த்திருந்த காவல்படை அதிகாரிகளையாவது இடமாற்றம் செய்ய வக்கில்லாத மக்கலான நம்மையும் நம்மை பிரதிநிதித்துவ படுத்துகின்ரோம் என கூறுகின்ற தலைமைகளையும்   நாம் என்னவென்று சொல்லுவது.

தேசவழமைசட்டம் ஒன்றை உருவாக்கி அதன்மூலம் அம்பாறையில் முஸ்லிம்கள் காணிகளை விற்க முடியும் ஆனால் வாங்க முடியாது என்ற சட்டத்தை உருவாக்கியவர்கள் வாழும் காலமிது.

அதேபோன்று முஸ்லிம்களுக்கு தாக்குவதற்கு நடுநிசி 12 மணிக்குகும் தயாராக இருக்கும் இனவாத கும்பல்கள் மேலோங்கியுள்ள இந்தநேரத்தில் நாம் பொறுமையாக இருப்பதே சிறந்தது.