அலி சாஹிர் மௌலானா தன்னிடம் பெற்றுக் கொண்ட $85 ,000.00 டொலர்களை திருப்பித் தராமல் ஏமாற்றுகின்றார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா அவர்கள் தொடர்பில் சில விடயங்களை அண்மையில் எனது முகநூலில் வெளியிட்டிருந்தேன்.

அத்துடன் அமெரிக்காவில் தங்கியிருந்த போது ஏ. சீ மயில்வானம் அவர்களுடன் அவர் செய்து கொண்டதாகக் கூறப்படும் ஒப்பந்தம், பரிமாறப்பட்ட பணம் மற்றும் இது தொடர்பில் ஒப்பந்தக்காரரான ஏ.சீ. மயில்வாகனம் அவர்கள் கடந்த வருடம் மே மாதம் 10 ஆம் திகதியிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கு அனுப்பிய 3 பக்கங்கள் கொண்ட கடிதம் அனைத்தையும் நான் வெளியிடத் தயார் என்றும் தெரிவித்திருந்தேன்.

(வாக்கு மூலம் MG_3776.TRIM)

இது தொடர்பில் பலரும் என்னிடம் பல கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பிக் கொண்டே உள்ளனர். உங்கள் ஆதாரங்களை வெளியிடுங்கள். அல்லது வெளியிடத் தயக்கமடைகிறீர்களா? குறித்த ஆதாரங்களை நீங்கள் வெளியிடாவிட்டால் நீங்கள் பொய் கூறுகிறீர்கள் என்றே நாம் கருதுவோம் என்றெல்லாம் என்னுடன் பலரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

அப்படியல்ல, சட்ட ரீதியான விடயங்களுக்கு அவை தொடர்பான வெறும் ஆவணங்களை மட்டும் வெளியிட்டு விட்டு அவை சரி என கூற முடியாதே. அந்த ஆவணங்கள் ஆதாரபூர்வமானவைகளா? சட்ட ரீதியானவைகளா என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்தே வெளியிட வேண்டும்.

இதற்காகத்தான் இவ்வளவு கால தாமதம். ஆவணங்கள் கிடைத்தாலும் அவை சட்ட ரீதியாகச் சரியானவையா என்பதனை பரிசீலனை செய்ய இன்று வரை எனக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. இன்று காலையிலேயே இந்த விடயம் தொடர்பில் என்னால் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சரி என உறுதிபடுத்தப்பட்டதனையடுத்தே அலி சாஹிர் மௌலானா விடயத்தை இங்கு பகிரஙகமாக வெளியிடுகிறேன்.

அலி சாகிர் மௌலானா அவர்கள் அமெரிக்காவில் வசித்த போது பெற்றுக் கொண்ட கடனில் மிகுதித் தொகையான இலங்கை ரூபாவின் மதிப்பில் 11,777,100 ரூபாவை இதுவரை செலுத்தாமை தொடர்பில் அவர் சந்தேக நபராகக் கருதப்பட்டு தற்போது கடுவெல மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி மனோகர டி சில்வாவினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உறுதிப்படுத்துவதற்காக இன்று (03) காலை சட்டத்தரணி மனோகர டி சில்வா அவர்களை நான் தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்த விவகாரம் தொடர்பில் பெப்ரவரி முதலாம் திகதி கடுவெல மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளோம் குறித்த வழக்கின் இலக்கம் -4249/m எனவும் இந்த வழக்கு ஜுலை 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பான அனைத்து ஆதாரபூர்வமான ஆவணங்களும் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உள்ளன. அவற்றை இங்கே இணைத்துள்ளேன்.

அத்துடன் தற்போது அமெரிக்காவில் வசிக்கும் பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த திருமதி மயில்வாகனத்தை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியவற்றையும் அவரது குரலிலேயே வெளியிடுகிறேன். அனுமதி பெறப்பட்டது.

அவர் கூறியவற்றைக் கேட்கும் போது மன வேதனையாக உள்ளது நீங்களே கேட்டுப் பாருங்கள்.

தங்களை மேன்மையானவர்களாகவும் மற்றவர்களைக் கேவலமாகவும் விமர்சிக்கும் நபர்கள் முதலில் தங்களை ஒரு சுயவிமர்சனம் செய்து கொண்டே மற்றவர்களை விமர்சிக்க வேண்டும்.

ஊழல்,மோசடி என்ற விடயங்கள் சட்டப்படி குற்றமாவதுடன் நமது மார்க்கத்தின்படி இவையெல்லாம் முற்றாக ஹராமாக்கப்பட்டவை.

இறால் தனது தலைக்குள் மலத்தை வைத்துக் கொண்டு தன்னை சுத்தமானவராகவும் மற்றவர்களை அசுத்தமானவர்களாகவும் கருதுமாம். அந்த நிலையில்தான் அலி சாகிர் மௌலானா இன்றுள்ளார்.

வீட்டுக்குள் விபசாரியை வைத்துக் கொண்டு மற்றவர்களின் மனைவிமாருக்கு வேசி பட்டம் சூட்டும் அரசியல் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும்.

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்