கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு வெற்றி ,பாதுகாப்பு தரப்பினரின் வசம் இருந்த காணிகள் விடுவிப்பு

FILE IMAGE
FILE IMAGE

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பிரதேசத்தில் பாதுகாப்பு தரப்பினரின் வசம் இருந்த காணி விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

விடுவிக்கப்படும் காணியில் 2018 ஆம் ஆண்டில் 85 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கேப்பாப்புலவு கிராமத்தில் உள்ள 133 ஏக்கர் காணி தேசிய பாதுகாப்புக் கருதி இலங்கைத் தரைப்படையின் பாதுகாப்புப் படைத் தலைமையகமாக இருந்து வந்தது.இந்த நிலையில், கடந்த 300 நாட்களாக கேப்பாபுலவு மக்கள் காணியை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனை தொடந்து, காணியை விடுவிக்க மீள்குடியேற்றத்துறை அமைச்சினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இதேவேளை, பாதுகாப்பு தரப்பினரின் படைத் தலைமையகத்தை இடம் மாற்றம் செய்வதற்கு மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக 148 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து நாளைய தினம் கேப்பாப்புலவு காணி விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது