இலங்கை அணியை மீட்­டெ­டுக்கும் நோக்கில் புதிய தலைமைப் பயிற்­றுநர் தலைமையில் வீரர்­க­ளுக்கு விசேட பயிற்சி

பங்­க­ளா­தேஷில் புத்­தாண்டில் நடை­பெ­ற­வுள்ள மும்­முனை சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை முன்­னிட்டு 23 வீரர்­களைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் முன்­னோடி குழாம் பெய­ரி­டப்­பட்­ட­டுள்­ளது. இந்த மும்­முனை சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மூன்­றா­வது அணி­யாக ஸிம்­பாப்வே இடம்­பெ­று­கின்­றது.

புதிய தலைமைப் பயிற்­றுநர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­கவின் ஆலோ­ச­னைக்கு அமைய குழாத்தில் இடம்­பெறும் 23 வீரர்­க­ளுக்கும் விசேட பயிற்சி அளிக்­கப்­ப­ட­வுள்­ளது. 

மேலும் அவர் விடுத்த வேண்­டு­கோளை நிறை­வேற்­றும்­வ­கையில்  குறிப்­பிட்ட வீரர்­களை உள்ளூர் போட்­டி­களில் விளை­யா­ட­வேண்டாம் என கேட்­டுக்­கொண்­டுள்­ள­தாக இலங்கை கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால குறிப்­பிட்டார்.

அதி சிறந்த ஆற்­றல்­களை உடைய வீரர்­களை இல­கு­வாக இனங்­காண்­ப­தற்­கான கால அவ­கா­சத்தை சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­க­வுக்கு வழங்கும் வகை­யி­லேயே இந்தப் பயிற்சித் திட்டம் அமை­ய­வுள்­ளது.

சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக சரிவை எதிர்­கொண்­டு­வந்­துள்ள இலங்கை அணியை மீட்­டெ­டுக்கும் நோக்கில் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க இப் பயிற்­சி­களைத் தீவி­ரப்­ப­டுத்­த­வுள்ளார். அத்­துடன் அணியை தனது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்­கவும் அவர் விரும்­புவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, இந்­தி­யா­வுக்கு எதி­ரான இரண்­டா­வது சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­யின்­போது உபா­தைக்­குள்­ளா­னதால் இரண்டு வாரங்­க­ளுக்கு விளை­யா­ட­மாட்டார் என அறி­விக்­கப்­பட்­டுள்ள ஏஞ்­சலோ மெத்யூஸ் குழாத்தில் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார். அத்­துடன் இந்­தி­யா­வுக்கு எதி­ரான சர்­வ­தேச ஒருநாள் போட்­டிக்­கான அணியில் இடம்­பெ­றா­ம­லி­ருந்த குசல் மெண்­டி­ஸுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. அதே­போன்று சில மாதங்­க­ளாக ஒரு நாள் போட்­டி­களில் விளை­யா­டாமல் இருந்­து­வரும் குசல் ஜனித் பெரே­ராவும் குழாத்தில் பெய­ரி­டப்­பட்­டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் குழாத்தில் ஒரே ஒரு அறி­முக வீர­ராக 22 வய­து­டைய வேகப்­பந்­து­வீச்­சாளர் ஷெஹான் மது­ஷங்க பெயரி­டப்­பட்­டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் குழாத்தில் பெய­ரி­டப்­பட்­டுள்ள வீரர்கள் புதிய பயிற்­றுநர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­கவின் கண்­கா­ணிப்பில் எதிர்­வரும் 28ஆம் திகதி பயிற்­சி­களை ஆரம்­பிக்­க­வுள்­ளனர்.

இலங்கை முன்­னோடி குழாம் திசர பெரேரா, உப்புல் தரங்க, தனுஷ்க குண­தி­லக்க, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்­திமால், ஏஞ்­சலோ மெத்யூஸ், குசல் ஜனித் பெரேரா, அசேல குண­ரட்ன, நிரோஷன் திக்­வெல்ல, சதீர சமரவிக்ரம, சுரங்க லக்மால், நுவன் ப்ரதீப், தசுன் ஷானக்க, லஹிர கமகே, விஷ்வா பெர்னாண்டோ, துஷ்மன்த சமீர, ஷெஹான் மதுஷன்க, லஹிரு குமார, அக்கில தனஞ்செய, ஜெவ்றி வெண்டர்சே, அமல அப்போன்சோ, லக்ஷான் சந்தகேன், சத்துரங்க டி சில்வா.