(வீடியோ) கல்முனை மாநகர சபை பிரிகின்றது (3 முஸ்லீம் சபைகளும் 1 தமிழ் சபையுமாக பிரிகின்றது )

அகமட் எஸ். முகைடீன்
 
கல்முனை மாநகர சபை பிரதேசத்தில் நான்கு உள்ளுராட்சி சபைகளை உருவாக்குவதற்கு உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சில் இன்று (17) வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்ட்டுள்ளது.
 
கல்முனை மாநகர சபையினை பிரித்து உள்ளுராட்சி மன்றங்களை அமைப்பது சம்பந்தமாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இவ் உயர் மட்டக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளான எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன், முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ், மாவை சேனாதிராஜா, சுமந்திரன், கோடீஸ்வரன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், ஆசாத் சாலி,  ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 
இதன்போது கல்முனை மாநகர சபை பிரிப்பு சம்பந்தமாக குறிப்பாக சாய்ந்தமருது கல்முனை விவகாரங்கள் அலசி ஆராயப்பட்டு மூன்று முஸ்லிம் பெரும்பாண்மை சபைகளையும் ஒரு தமிழ்ப் பெரும்பாண்மை சபையையும் கொண்டதாக நான்கு உள்ளுராட்சி சபைகளை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
 
 
இதன்போது முஸ்லிம் தமிழ்ப் பிரதேசங்களின் புதிய எல்லை கோரிக்கை சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது. இருந்தபோதிலும் இது தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகள் 5 பேரையும் தமிழ் பிரதிநிதிகள் 5 பேரையும் கொண்ட குழு மூலம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடாத்துவதென  முடிவெடுக்கப்பட்டது.